மேற்கு வங்க மாநிலத்தில் 697 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை கொரோனாவுக்கு 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த 60 வயதான மூத்த மருத்துவர் பிப்லாப் கண்டி தஸ்குப்தாவுக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவரின் மறைவுக்கு மேற்கு […]
கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை மறு அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்து நல்லடக்கம் செய்யப்பட்ட மருத்துவரின் சைமனின் உடலை இடமாற்றம் செய்ய வாய்ப்பில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கடந்த 19 ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவர் சைமன் உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய சென்ற இடத்தில பொதுமக்கள் இங்கு அடக்கம் செய்யக்கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வேறு இடத்திற்கு சென்று மருத்துவரின் உடல் அடக்கம் […]
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த மருத்துவர் சைமன் அவர்களின் மனைவி ஆனந்தி சைமனிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு முதல்வர் ஆறுதல் கூறியுள்ளார். கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்தியிடம் தொலைபேசியில் முதல்வர் பழனிசாமி ஆறுதல் கூறினார். சைமனின் மகன், மகளின் எதிர்கால நலன் கருது தைரியமாக இருக்க ஆனந்தியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். கீழ்பாக்கம் கல்லறையில் தனது கணவரின் உடலை மறுஅடக்கம் செய்ய வலியுறுத்தியிருந்தார் ஆனந்தி சைமன் என்பது குறிப்பிடப்படுகிறது. இதுகுறித்து முதல்வர் பழனிச்சாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் […]