கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதிய டாக்டர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர். உயரதிகாரி, ஆய்வு செய்யாமல் சென்றது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இம்மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளிநோயாளிகளும், 500க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் அடிக்கடி விபத்துக்களில் படுகாயமடைவோருக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் போதிய டாக்டர், செவிலியர் மற்றும் பணியாளர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். சிகிச்சைக்கு […]
தூத்துக்குடி அண்ணாநகர் 9 வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தரராஜ். இவரது மனைவி மாரியம்மாள் (51). இவர், கடந்த பல ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமடையவில்லை. இதற்காக ஏராளமான பணத்தை செலவழித்து மனமுடைந்த மாரியம்மாள், கடைசியாக கடந்த 5ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரியம்மாளின் கர்பப்பையில் 7 கிலோ அளவுள்ள கட்டி இருந்தது தெரியவந்தது. […]