திமுகவின் 23 அணிகளின் நிர்வாகிகளுடன் கட்சி தலைவர் ஸ்டாலின் ஆலோசனை. திமுகவில் உள்ள 23 அணிகளின் நிர்வாகிகளுடன் கட்சி தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இளைஞர், மகளிர், மாணவரணி உள்ளிட்ட 23 அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் பணிகள், உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.