திமுக மாணவரணி தலைவராக ராஜீவ்காந்தி நியமனம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு. திமுக மாணவரணி தலைவர், செயலாளர், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் ஆகியோர்களை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அதன்படி, திமுக மாணவரணி தலைவராக ராஜீவ்காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாணவரணிச் செயலாளராக எழிலரசனும், இணை செயலாளர்களாக பூவை ஜெரால்டு, மோகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திமுக மாணவர் அணி துணை செயலாளராக மன்னை சோழராஜன், ரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், அமுதரசன், ஆனந்த், பொன்ராஜ், […]