திமுகவில் 72 மாவட்ட செயலாளர்களில் 7 மாவட்ட செயலாளர்களை மாற்ற திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளும் திமுகவில் மாவட்ட செயலாளர்கள், கட்சி தலைமை முக்கிய பதவிகள் என அனைத்து கட்சி பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், பொதுச்செயலாளராக அமைச்சர் துரைமுருகன் அவர்களும், பொருளாளராக டி.ஆர்.பாலு அவர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவர் என தகவல் வெளியாகியுள்ளது. அதே போல, மாவட்ட செயலாளர்களை […]
சமூகநீதியும் மதநல்லிணக்கமும் செழித்துச் சிறந்திருப்பதைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள இயலாமல்,மதவாத நச்சு விதைகளைத் தூவிட முயற்சி அபாயகர சக்திகள்,அவர்களுக்குத் துணை போகும் அடிமைகளிடமிருந்து தமிழகத்தை சேதாரமின்றி பாதுகாக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும்,அபாயகரமான சக்திகளை அடையாளம் காட்டிடும் வகையில் தமிழகம் முழுவதும் திராவிட மாடல் பயிற்சி பட்டறைகளை நடத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வரும்,திமுக […]