கொரோனா வைரஸ் தொற்று அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் கொரோனா தொற்று தடுப்பதை தடுக்க பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றார். இந்நிலையில் திமுக சார்பாக அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சியை சேர்ந்தவர்களிடம் நிவாரண நிதியுதவிகளை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து, வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்த் ரூபாய் 1 கோடியும், சேலம் வடக்கு சட்டமன்ற […]
வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 485 340 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், வேலூர் வாக்காளர்களுக்கு நன்றி .இந்த வெற்றியின் மூலம் நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சி திமுக என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. வெற்றியைச் சாத்தியமாக்கிய வேலூர் வாக்காளர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும் நன்றி. இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்துள்ளார்.
வேலூரில் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்ட பின்னர் வருகின்ற 15 ஆம் தேதி நடைபெறுகிறது. அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி போட்டியிடுகிறார். வேட்பாளர்களை ஆதரித்து கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.இதனால் அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்.திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டனர்.இதனையடுத்து […]