சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதா நிறைவேற்றம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்கும் போது என்னென்ன விஷயங்கள் பற்றி பேச வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் திமுக எம்பிக்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். […]