திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோவின் மகன் விழுப்புரம் அருகே கார் விபத்தில் பலியாகியுள்ளார். புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பும்போது விழுப்புரம் கோட்டகுப்பம் அருகே எம்பி என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ் ஓட்டி வந்த கார் தடுப்புச் சுவரில் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.ராகேஷ் வயது 22. மேலும்,விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு நபர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக,திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் நடிகர் மனோகர் உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.