சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டதோடர் தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் திங்கள் (நவம்பர் 25) முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்த குளிர்கால கூட்டத்தொடரில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்காக என்ன பேச வேண்டும் அவர்களின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. […]
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1995ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் அமைந்துள்ள குரோம்பேட்டை லெதர் ஃபேக்டரியை தற்போதைய அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன் வாங்கியது தொடர்பாக புகார் எழுந்தது. குவிந்தன் தாசன் என்பவர் நிலஅபகரிப்பு அடிப்படியில் கொடுத்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீசார் 2 வழக்குகள் பதிந்து வழக்கை விசாரணை செய்து வந்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு […]
5 லட்சம் கோடி வரையில் 5 ஜி ஏலம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 1.5 லட்சம் கோடிவரையில் தான் ஏலம் போயுள்ளளது. – திமுக எம்.பி.ஆ.ராசா குற்றசாட்டு. 5 ஜி அலைக்கற்றை ஏலம் அண்மையில் தான் நடைபெற்று முடிந்தது. இந்த 5 ஜி அலைக்கற்றை மொத்தமாக ரூ.1,50,173 கோடி வரையில் ஏலம் போயுள்ளது. இதில் அதிகபட்சமாக ஜியோ ரூ.88,078 கோடிக்கு அலைக்கற்றையை வாங்கியுள்ளது. ஏர்டெல் நிறுவனம் ரூ.43,048 கோடி ஏலத்தொகைக்கும், வோடஃபோன் – ஐடியா நிறுவனம் […]
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுத்து வாக்குவாதம் செய்த ரிசர்வ் வங்கி பணியாளர்கள் குறித்து திமுக எம்.பி. தயாநிதிமாறன் கருத்து. சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்ட போது எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் அலட்சியம் காட்டியுள்ளதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகள், பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாகவும் […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று திமுக மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 19-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் தி.மு.க. எம்.பி.க்கள் எவ்வாறு செயல்படவேண்டும்.? என்பது குறித்து ஆலோசிப்பதற்காக இந்த […]
திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமாகிய கனிமொழி இன்று மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திமுக மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி இன்று மதுரை தெற்கு மாவட்ட பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மதுரை ஆர்.டி.ராகவையார் மகாலில் அனைத்து சமுதாய சங்கங்களின் நிர்வாகிகளை காலை 9 மணிக்கு பின் சந்திக்க உள்ள கனிமொழி, 10 மணிக்கு ஜீவாநகர் செல்ல உள்ளதாகவும் அதன் பின் அப்பள தொழிற்சாலைகளில் பணி புரிய கூடிய பெண் தொழிலாளர்களுடன் உரையாட உள்ளதாகவும் கூறப்படுகிறது. […]
திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல். தங்களுக்கு எதிரான வன்கொடுமை தடைச்சட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். டி.ஆர்.பாலு, தயாநிதி மாறநின் மனுக்களை அவசர வழக்காக பிற்பகலில் நீதிபதி நிர்மல்குமார் விசாரணை மேற்கொள்கிறார். தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கூறி கோவையை சேர்ந்த சேகர் என்பவர் புகார் அளித்துள்ளார். சேகரின் புகாரால் கோவை வெரைட்டி காவல்நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது […]
கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவுக்குச் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளை காலை 06.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது. இதேபோல், சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று முதல் அரசு டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் டாஸ்மாக் கடைகள் […]