தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதன் பிறகு கடந்த திங்கள் பிப்ரவரி 19ஆம் தேதியன்று 2024-2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். நேற்று பிப்ரவரி 20ஆம் தேதி 2024-2025ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதனை அடுத்து இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்காக தமிழக சட்டப்பேரவை கூடியது. அதில், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி குறித்த கோரிக்கைகளை […]