PMK: வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எவ்வளவு காலம் தாழ்த்துவாய்? என திமுக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசு விரும்பவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை அளிக்க இதுவரை வழங்கப்பட்ட […]
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் சரவணன் என்ற விவசாயிக்கு சொந்தமாக விவசாய நிலம் இருக்கிறது. இந்த விவசாய நிலத்தில் இளைஞர்கள் சிலர் மது அருந்திக்கொண்டு இருந்திருக்கிறார்கள். இதனை பார்த்த சரவணன், இங்கு மது அருந்தாதீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர்கள் கையில் வைத்து இருந்த கத்தியை வைத்து சரவணனை குத்தி கொலை செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய […]
சொத்து வரி உயர்வுக்குக் காரணமான விடியா திமுக அரசைக் கண்டித்து இன்று (5.4.2022) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவிப்பு. தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள்,நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை குறைந்தபட்சமாக 25 % முதல் அதிகபட்சமாக 150 % வரை உயர்த்தி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசு அறிவிப்பு விடுத்தது.ஆனால்,இதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில்,சொத்து வரி உயர்வுக்குக் காரணமான விடியா திமுக அரசைக் கண்டித்து […]
தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களிலும்,வேறு சில மாவட்டங்களிலும் பருவம் தவறிய பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க,விடியா திமுக அரசை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில்,தாலுக்கா அலுவலகங்கள் முன்பு நாளை மறுநாள் விவசாயப் பெருங்குடி மக்களோடு இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று ஓபிஎஸ்,ஈபிஎஸ் அறிவிப்பு. தமிழகத்தில் பெருமழையால் பாதிப்புக்குள்ளான விவசாயப் பெருங்குடி மக்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையினை வழங்காத விடியா திமுக அரசைக் கண்டித்தும்;விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் பொருட்டு,அவர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க […]
இந்த திட்டம் திமுக அரசால் மூடப்படுகிறது என்ற அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. ஏழை, எளிய மக்கள் கிராமப்புறங்களிலும், நகரப் பகுதிகளிலும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு மாண்புமிகு அம்மா அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற ஒரே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், இத்திட்டம் இந்த விடியா அரசால் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது. ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு […]
நாமக்கல்:திமுக ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நடை திறக்கப்பட்டு 1,00,008 வடமாலை சாத்தப்பட்டுள்ளது. மேலும்,கோயில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதன்படி,இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.குறிப்பாக,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில்,திமுக ஆன்மீகத்திற்கு எதிரான அரசு […]
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று இரண்டாவது ஆளுநர் உரை சமர்ப்பிப்பதற்கான தேதி குறிப்பிட்டுள்ள நிலையில்,சீர்திருத்தப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டனவா என்பது குறித்தும்,தமிழ்நாடு அரசின் வருவாயைப் பெருக்குவதிலோ,சீர்திருத்தங்களை, மேற்கொள்வதிலோ,சிக்கனத்தைக் கடைபிடிப்பதிலோ எந்த நடவடிக்கையும் தி.மு.க. அரசு எடுத்ததாகத் தெரியவில்லை என்றும் ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் நடைபெற்ற அரசு ஊழியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஏதோ தி.மு.க. தான் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறைய செய்ததுபோலவும், கடந்த பத்தாண்டு காலமாக தமிழ்நாட்டின் நிதி […]
அனைவருக்கும் பொது விநியோகத் திட்டத்தை வழங்க முதல்வர் உறுதி செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். வருமானத்தின் அடிப்படையில் ரேசன் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்து “அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் நோக்கத்தை சீர்குலைக்கும்” முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டால், அதனை அதிமுக கடுமையாக எதிர்க்கும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும்,இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல்: “நியாய விலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாகத் தரப்படும்”; […]
தமிழகம்:நூலிற்கான விலையினைக் குறைப்பதற்கு,தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். நூல் மற்றும் பஞ்சுக்கு விதிக்கப்படும் 5 சதவீத GST வரியினை முழுமையாக ரத்து செய்ய, GST குழு கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றும்,விலையில்லா வேட்டி, சேலை தயாரிப்பதற்கான நூலினை நெசவாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும்,நூலிற்கான விலையினைக் குறைப்பதற்கு,தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது […]
சென்னை:திமுக அரசு சரியாக திட்டமிட்டு செயல்படாமல் இருந்ததால்தான்,தற்போது சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது என்று இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில்,பல மாவட்டங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளானது.குறிப்பாக,சென்னையில் பல பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில்,சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்தார்.இதனைத் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் […]
விடியா திமுக அரசு,நடப்பு பருவத்திற்குத் தேவையான உரங்களை முன்னெச்சரிக்கையாக வாங்கி இருப்பு வைத்ததாக தெரியவில்லை என்று இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கிடைத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மாடு கட்டி போரடித்தால்;மாளாது செந்நெல் என்று யானை கட்டி போரடிக்கும் காலம்;ஒன்று தமிழகத்தில் இருந்தது. பண்டைய காலங்களில் வேளாண்மையில் தமிழகம் எவ்வாறு சிறந்து […]
நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை துரிதப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக நிர்வாகிகளின் மிரட்டல்: “ஏற்கெனவே எனது அறிக்கையில் தமிழ் நாட்டில், குறிப்பாக இந்த சீசனில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் ஏரிப் பாசனம் மூலம் நெல் பயிறிட்ட மாவட்டங்களில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திமுக நிர்வாகிகள், ஆளும் கட்சியினர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி தாங்கள் டோக்கன் கொடுக்கும் விவசாயிகளிடம் […]
முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது குறித்து எந்தவொரு ரெய்டுக்கும்,பயப்படாத இயக்கம் அதிமுக என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியின் போது வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி வருமானத்திற்கு அதிகமாக ரூ.90 கோடி அளவிற்கு சொத்து குவித்ததாகக் எழுந்த புகாரின் பேரில் இன்று காலை 6.30 மணி முதல் கே.சி.வீரமணியின் சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில்,இந்த […]
தமிழ் நாட்டில் நீட் தேர்வினை நடத்த விடமாட்டோம் என்று கூறிய விடியல் அரசின் வாய்சவடாலால் மாணவச்செல்வதை பெற்றோர் இழந்து தவிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியதாவது: திமுகவின் முதல் கையெழுத்து: “தி.மு.க. தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது மாநிலம் முழுவதும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்பதுதான் என்று கூறியது. நீட்டை ரத்து செய்யும் வழிமுறைகள் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், இப்போதைய முதலமைச்சருமான […]
ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் கொள்கையின் அரசாக திமுக அரசு இருக்கும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்,மத்திய பண்பாடு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெக்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில்,இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் கூறியதாவது,”பல ஆயிரம் சிந்தனைகளை கொண்டவர் பாரதி,அவரது கவிதை மற்றும் பாடல்களை […]
பழந்தமிழ் இலக்கியங்களை, ‘திராவிடக்களஞ்சியம்’ என அடையாள மாற்றம் செய்ய முயலும் திமுக அரசின் செயல், தமிழினத்திற்கெதிரான மிகப்பெரும் மோசடித்தனமாகும் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். சங்கத்தமிழ் இலக்கியங்களை ‘திராவிடக்களஞ்சியம்’ என அடையாளப்படுத்தும் திராவிடத்திருட்டுத்தனம் வெட்கக்கேடானது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் செயலால் பேரதிர்ச்சி : சங்கத்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து அவற்றிற்கு ‘திராவிடக் களஞ்சியம்’ எனப்பெயர் சூட்டப்படுவதாக தமிழக அரசு […]
பத்திரிக்கை சுதந்திரத்தை மட்டுமல்ல, பத்திரிக்கை நடத்துவோரின் உரிமையையும் திமுக அரசு காலில்போட்டு மிதித்திருக்கிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும்,இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜனநாயகத்தின் நான்காம் தூண்: ஜனநாயகத்தின் நான்காம் தூண் பத்திரிகை என்பார்கள். அந்த பத்திரிகை சுதந்திரத்தைக் காப்போம் என்று கூறிக்கொள்ளும் திரு. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, பத்திரிகை சுதந்திரத்தை மட்டுமல்ல, பத்திரிகை நடத்துவோரின் உரிமையையும் காலில்போட்டு மிதித்திருக்கிறது. புரட்சித் […]