திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட, ஆயுள் முழுவதும் சிறைசெல்லக்கூட தாம் தயாராக இருப்பதாக, தெரிவித்திருக்கிறார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி உரிமை மீட்பு பயணத்தை திருச்சி முக்கொம்புவில் இருந்து சனிக்கிழமை தொடங்கினார். இரண்டாவது நாளான நேற்று, தஞ்சாவூர் சில்லத்தூரில் அவர் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். காவிரிக்காக போராடிய தங்கள் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப் போட்டது குறித்து அஞ்சவில்லை என்றும், காவிரிக்காகப் போராடி ஆயுள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் […]