பெங்களூரு : அண்மையில் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2024-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் பொதுவான அறிவிப்புகளையும் நிதி ஒதுக்கீடுகளையும் தாண்டி பீகார் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு கூடுதல் அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தன. கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளதாக குற்றம் சாட்டினார். இதனை அடுத்து, குறிப்பிட்ட மாநிலங்கள் மத்திய அரசிடம் தங்கள் மாநில கோரிக்கைகளை முன்னிறுத்தி […]
கர்நாடகா: காவிரியில் போதிய அளவு தண்ணீர் இல்லை என்று கடந்த வாரம் வரையில் கர்நாடக அரசு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட மறுப்பு தெரிவித்து வந்தது. காவிரி ஒழுங்காற்று வாரியம் தினம் ஒரு டிஎம்சி வீதம் இம்மாதம் முழுக்க வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்து ஒருநாளைக்கு வெறும் 8 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படும் என அம்மாநில அரசு கூறியிருந்தது. இப்படியான சூழலில் தான் கடந்த வாரம் முதல் காவிரி நீர்ப்பிடிப்பு […]
பெங்களூரு: காவிரியில் போதிய அளவு தண்ணீர் இல்லாத காரணத்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். காவிரி ஒழுங்காற்று வாரியத்தின் 99வது ஆலோசனை கூட்டம் அக்குழுத் தலைவர் நவீன் குப்தா தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு ஜூன் முதல் கர்நாடகா அரசு காவிரியில் இருந்து 175 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால், 79 டிஎம்சி தண்ணீர் தான் இதுவரை கர்நாடக […]
சென்னை: பிரதமர் மோடி பற்றி அவதூறு பரப்பினால் 100 கோடி ரூபாய் தருவதாக டி.கே.சிவகுமார் பேரம் பேசினார் என தேவராஜே கவுடா குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகா ஹாசன் தொகுதி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்பியும், அதே தொகுதி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா மீது பல்வேறு பாலியல் குற்றசாட்டுகள் பதியப்பட்டுள்ளன. தற்போது வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வலை பிடிக்க ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல, மஜத மூத்த தலைவர் எச்.டி.ரேவண்ணா மீதும் இதே போல பாலியல் […]
Rameshwaram Cafe : பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதியில் பிரபலமாக உள்ள ராமேஸ்வரம் கஃப ஹோட்டலில் நேற்று மதியம் 1 அளவில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஹோட்டலில் இருந்த ஊழியர்கள் உட்பட 10 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து கர்நாடக போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்திற்கு கர்நாடக […]
கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக டி.கே.சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இணைந்து ஆட்சி ஆட்சி நடைபெற்றது.அந்த சமயத்தில் அமைச்சராக பதவி வகித்து வந்தார்.இந்நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக டி.கே.சிவக்குமாரை நியமித்தது அகில இந்திய காங்கிரஸ் தலைமை.இந்த அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.
சிவக்குமார் கைது, அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு மேலும் ஒரு உதாரணம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்தனர். The arrest of DK Shivakumar is another example of the vendetta politics unleashed by the Govt, using agencies like the ED/CBI & a pliant media to selectively target individuals. #DKShivakumararrested […]