Tag: diwali2020

தீபாவளி சிறப்பு பேருந்து.. முன்பதிவு மூலம் ரூ. 5.84 கோடி வருவாய்..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சிரமம் இல்லாமல் ஊருக்குப் பயணம் செய்ய செய்யவும், தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பிற ஊருக்குத் திரும்பும் வகையில் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து 6 இடங்கள் இருந்து மொத்தம் 8,753 பேருந்துகள் இயக்கப்பட்டு மூன்று லட்சத்து 97 ஆயிரத்து 553 பயணிகளும் பல்வேறு பகுதியில் இருந்து மற்ற பிற ஊர்களுக்கு 4564 […]

diwali2020 4 Min Read
Default Image

மும்பையில் 15 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவிலான ஒலி மாசு பதிவு.!

ஆவாஸ் அறக்கட்டளை என்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம், “இந்த ஆண்டு தீபாவளியின்போது மும்பையில் பதிவு செய்யப்பட்ட ஒலி மாசு அளவு கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவாக மிகவும்  குறைந்துள்ளது என்று கூறியுள்ளது. பட்டாசு வெடிப்பது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது மற்றும் மாநில அரசின் கடுமையான வழிகாட்டுதல் ஆகியவையின் காரணமாக மும்பையில் ஒலி மாசு அளவு குறைந்துள்ளது என்று ஆவாஸ் அறக்கட்டளையின் நிறுவனர் சுமைரா அப்துலலி கூறினர். இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் […]

#mumbai 3 Min Read
Default Image

சொந்த ஊரிலிருந்து திரும்பும் பொது மக்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் .!

தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாடிவிட்டு சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பும் பொது மக்களுக்கு அடுத்த 4 தினங்களுக்கு 16,026 பேருந்துகள் இயக்கபட உள்ளது . தீபாவளியை கொண்டாட மக்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் . அவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக 9,510 பஸ்கள் சென்னையிலிருந்து,, 5,247 பஸ்கள் பிற ஊர்களிலிருந்தும் 11,12 மற்றும் 13-ஆம் தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாடிவிட்டு சென்னை மற்றும் […]

diwali2020 3 Min Read
Default Image

சென்னையில் 18.673 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்..!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கடந்த ஆண்டு 22.50 கழிவுகள் சேகரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாள் வெடிக்கப்பட்ட பட்டாசுக்கழிவுகள் 18.673 டன் ஆக உள்ளது. சென்னையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 3 டன் பட்டாசு கழிவுகள் குறைந்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

diwali waste 1 Min Read
Default Image

சென்னையில் விதிமீறி பட்டாசு வெடித்த 348 பேர் மீது வழக்கு பதிவு.!

தீபாவளிக்கு விதிமீறி பட்டாசு வெடித்ததால் 348 பேர் மீது சென்னையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி திருநாள் நேற்று நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், தீபாவளி என்றாலே பட்டாசு தான் ஞாபாகத்துக்கு வரும், ஆனால் மாசு கட்டுப்பாடு மற்றும் கொரோனா ஊரடங்கை காரணமாக வைத்து பல மாநிலங்களில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் பட்டாசுகளுக்கு அனுமதி கொடுத்திருந்தாலும், நேரக்கட்டுப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசின் கட்டுப்பாட்டுக்கும் விதிமுறைகளுக்கு மதிப்பளிக்காமல் நேற்று பட்டாசு வெடித்த பலர் மீது […]

#Arrest 2 Min Read
Default Image

தனது சொந்த கிராமத்தில் சைக்கிளில் பயணம்! அமைச்சர் விஜயபாஸ்கரின் தீபாவளி கொண்டாட்டம்!

தனது சொந்த கிராமத்தில் சைக்கிளில் பயணம் மேற்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர். இந்தியா முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் பிரபலங்கள் பலரும் இந்த தீபாவளியை பல விதமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள், அவரது சொந்த கிராமமான விராலிமலைக்கு சைக்கிளில் சென்று, மக்களுக்கு பரிசு கொடுத்து தீபாவளியை கொண்டாடியுள்ளார். இதனை அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Deepavali at my native village – the villagers […]

diwali2020 2 Min Read
Default Image

பாலைவனமோ? பனிமலையோ? ராணுவ வீரர்கள் எங்கு இருக்கிறார்களோ, அங்கு தான் என்னுடைய தீபாவளி! – பிரதமர் மோடி

பாலைவனமோ? பனிமலையோ? ராணுவ வீரர்கள் எங்கு இருக்கிறார்களோ, அங்கு தான் என்னுடைய தீபாவளி. இன்று நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும், எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளியை ராஜஸ்தான் ஜெய்சால்மரில் உள்ள லாங்கிவாலா முகாமில், தீபாவளியை கொண்டாடியுள்ளார். அப்போது ராணுவ வீரர்கள் மத்தியில் பேசுகையில், பனிமாலையோ, பாலைவனமோ ராணுவ வீரர்கள் எங்கையோ அங்கு தான் […]

diwali2020 3 Min Read
Default Image

வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு கையசைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்!

வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு கையசைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார். இன்று இந்தியா முழுவதும், தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு  வருகிறது. இந்நிலையில்,நாக்கால் அனைவரும் புத்தாடைகள் அணிந்து, வெடி வெடித்து மிகவும் உற்சாகமாக இந்த விழாவாக கொண்டாடி .வருகின்றனர்.  இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சென்னை போயஸ்  ,கார்டானில் தனது இல்லத்தின் முன்பு கூடியிருந்த ரசிகர்களை பார்த்து கை அசைத்து தீபாவளி வாழ்த்து  தெரிவித்துள்ளார்.

Actor Rajinikanth 2 Min Read
Default Image

அயோத்தியில் களைகட்டும் தீபாவளி கொண்டாட்டம்! வண்ணவிளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி!

அயோத்தியில் களைகட்டும் தீபாவளி கொண்டாட்டம். இந்தியா முழுவதும் இன்று தீபாவளி திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் தீபாவளி திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அயோத்தி நகரமே வண்ணக்கோலம் பூண்டுள்ள நிலையில், கட்டடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நகரமெங்கும் ஜொலித்துக் கொண்டுள்ளது. இந்நிலையில், ராமர், லட்சுமணர், சீதை, அனுமர் வேடமிட்டவர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஹெலிகாப்டரில் சரயு நதிக்கரையில் வந்திறங்கினார். இவர்களை ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்று […]

ayothi 2 Min Read
Default Image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு 4 நாட்கள் விடுமுறை.!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், நவ.16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்க்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து நவ.9ம் தேதி கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 50%-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பிள்ளைகளை திறக்க வேண்டாம் என தெரிவித்தனர். இதனையடுத்து, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்தி […]

#Students 3 Min Read
Default Image

தீபாவளிக்கு உ.பி.யில் 13 நகரங்களில் பட்டாசுகள் விற்க, பயன்படுத்த தடை.!

பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் மாசுபாடு காரணமாக நுரையீரல் பாதிப்பு, கொரோனா நோய் பரவல் காலகட்டத்தில் மேலும் அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறிய நிலையில், பல்வேறு மாநிலங்களும் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்துள்ளன. இந்நிலையில், அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால் நவம்பர் 30 ஆம் தேதி வரை  உத்தரபிரதேச மாநிலத்தில்  உள்ள முசாபர்நகர், ஆக்ரா, வாரணாசி, மீரட், ஹப்பூர், காஜியாபாத், கான்பூர், லக்னோ, மொராதாபாத், நொய்டா, கிரேட்டர் நொய்டா, பாக்பத் மற்றும் புலந்த்ஷஹர் ஆகியவை 13 நகரங்களில் அனைத்து […]

diwali2020 2 Min Read
Default Image

தீபாவளி வரை இலவச அனுமதி – கடலூர் தியேட்டர் நிர்வாகம்

தீபாவளி வரை இலவச அனுமதி என்று கடலூரில் ஒரு திரையரங்கு உரிமையாளர் தெரிவித்துள்ளார். திரையரங்குகளில் புது திரைப்படங்களை திரையிட விபிஎப் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து தீபாவளிக்கு புது படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்க தொடங்கியுள்ளது . இந்நிலையில், தமிழகத்தில் இன்று  திறக்கப்பட்ட நிலையில், கடலூரில் உள்ள கிருஷ்ணாலய திரையரங்களில் ரசிகர்களுக்கு தீபாவளி வரை இலவச அனுமதியளிக்கப்படும் என்று உரிமையாளர் அறிவித்துள்ளார்.

cuddalore 2 Min Read
Default Image

திருவள்ளூரில் திரையரங்குகளை திறக்க உரிமையாளர்கள் மறுப்பு.!

திருவள்ளூர் மாவட்டத்தில் திரையரங்குகளை திறக்க உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார்கள். தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், தமிழக முழுவதும் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படுகிறது. தீபாவளிக்கு புது படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் விபிஎப் கட்டணம் செலுத்த எதிர்ப்பு தெரிவித்து புது திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படாது என்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. அதற்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் படத்தின் வசூலில் 50% -ஐ அளித்தால் விபிஎப் கட்டணத்தை […]

diwali2020 3 Min Read
Default Image

தமிழகத்தில் நாளை முதல் 14,757 சிறப்பு பேருந்துகள்..!

தமிழகம் முழுவதும் நாளை முதல் 14,757 தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் வருகின்ற 14-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்குச்செல்லும் வசதிக்காக தமிழகம் முழுவதும் 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக தமிழகத்தில் தற்போது குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பு பேருந்துகள் […]

bus 3 Min Read
Default Image

தீபாவளி பட்டாசு விபத்து! சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ள சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை!

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில், சிறப்பு தீக்காய வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தீபாவளி கொண்டாட தயாராகி வருகிறனர். பொதுவாக திருவிழாக்கள் என்றாலே, நமது நினைவுக்கு வருவது பட்டாசுகளும், புத்தாடைகளும் தான். பட்டாசுகள் இல்லாமல் எந்த விழாவும் கொண்டாடப்படுவதில்லை. இந்நிலையில், தீபாவளி கொண்டாட்டத்தில், வெடி வெடிக்கும் போது எதிர்பாராமல் வெடி விபத்துக்கள் ஏற்படுவதுண்டு. இந்த விபத்தால் பாதிக்கப்படுவோருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்காக, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில், சிறப்பு தீக்காய வார்டு அமைக்கப்பட்டுள்ளது. […]

#Crackers 3 Min Read
Default Image

#BREAKING: டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை!

நவம்பர் 10 முதல் 30-ம் தேதி வரை டெல்லியில் பட்டாசு வெடிக்க பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 14-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக தீபாவளி பண்டிகை கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்படுகிறது. ஆனால், ஒரு சில மாநிலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காற்றுமாசு அதிகமுள்ள இடங்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம். அதாவது ,டெல்லி மற்றும் நாடு முழுவதும் கடந்த […]

diwali2020 3 Min Read
Default Image

பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராம மக்கள்! எதற்காக தெரியுமா?

பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராம மக்கள். நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள பெரம்பூர் கிராமம் எப்போதுமே பசுமையாக காணப்படுகிறது. இயற்கை எழில் நிறைந்த, இந்த கிராமத்தில், கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து, ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் கூட்டமாக வந்து தங்குவது வழக்கம். பெரம்பூரில் உள்ள கிராமங்களில் உள்ள மரங்களில் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வேப்பமரம், வேங்கை மரம், ஆலமரம் மாமரங்களில் கூடு அமைத்து வாழ்ந்து வருகிறது. இந்நிலையில், இங்கு […]

#Crackers 3 Min Read
Default Image

காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்கத் தடை – தேசிய பசுமை தீர்ப்பாயம்

காற்றுமாசு அதிகமுள்ள இடங்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம். தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 14-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக  தீபாவளி பண்டிகை கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்படுகிறது.  தீபாவளி என்றாலே பட்டாசு தான் நினைவுக்கு வரும். ஆனால், ஒரு  சில மாநிலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காற்றுமாசு அதிகமுள்ள இடங்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம். தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் […]

diwali2020 3 Min Read
Default Image

2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் – ஹரியானா முதல்வர்

தடை விதிக்கப்பட்ட சில நாட்களில், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர்  2 மணி நேரம் பட்டாசுகளை வெடிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடவுள்ளனர். இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக  தீபாவளி பண்டிகை கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்படும்.  தீபாவளி என்றாலே பட்டாசு தான் நினைவுக்கு வரும். ஆனால்,  கொரோனா சூழலை கருத்தில் கொண்டு அண்மையில், சில மாநிலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதித்து அம்மாநில அரசுகள்  உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், கடந்த […]

diwali2020 4 Min Read
Default Image

“ராமன், ராவணனை வீழ்த்தியது போல நாம் கொரோனாவை வென்றுவிடுவோம் “- பிரிட்டன் பிரதமர் தீபாவளி வாழ்த்து!

ராமன், ராவணனை வீழ்த்தியது போல நாம் விரைவில் கொரோனாவை வென்று விடுவோம் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வரும் 14 ஆம் தேதி, இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இந்த தீபாவளி தினத்தன்று, புத்தாடை அணிந்து, இனிப்புகள் வழங்கி, பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவது வழக்கம். இந்தியாவில் மட்டுமின்றி, இந்தியர்கள் இருக்கும் பல நாடுகளில் இந்த தீபாவளி பண்டிகை கொண்டாடுவது வழக்கம். அந்தவகையில், பிரிட்டன் நாட்டில் இந்தியர்கள் அதிகளவில் […]

BorisJohnson 5 Min Read
Default Image