பெங்களூர் : தீபாவளி இரவில் நடந்த துயர சம்பவத்தில் 32 வயது சபரீஷ் என்ற நபர் உயிரிழந்தார். இவருடைய இறப்புக்குக் காரணம் அவர்கள் நண்பர்கள் கொடுத்த தேவையில்லாத சவால் தான் காரணம். ஏனென்றால், தீபாவளி பண்டிகை அன்று சபரீஷ் தனது நண்பர்களுடன் இணைந்து கொண்டாடி வந்தார். அப்போது அவருடைய நண்பர்கள் ஆபத்தான முறையில் ஒரு சவாலைச் செய்யச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். மதுபோதையில் அவருடைய நண்பர்கள் பெரிய ரக பட்டாசு ஒன்றைக் கீழே வைத்துக்கொண்டு அதன்மீது கார்ட் போர்ட் […]
சென்னை : தமிழகம் முழுவதும் அல்லாது உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களால் தீபாவளி பண்டிகை நேற்று சிறப்பாகவே கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் விதிகளை மீறி பட்டாசு வெடித்துள்ளதால் 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு, புத்தாடை தான் கொண்டாட்டமாகவே இருக்கும். குறிப்பாக மக்கள் தங்களது மகிழ்ச்சியைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருவார்கள். இருப்பினும், காற்று மாசுபடுவதைத் தடுப்பதற்குக் குறிப்பிட்ட ஒரு சமயத்தில் தான் வெடி […]
சென்னை : நேற்று இந்தியா முழுக்க தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புத்தாடை உடுத்தி, இனிப்பு பலகாரங்கள் வழங்கி பட்டாசு வெடித்து பலரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். பட்டாசு வெடிக்க, நேர கட்டுப்பாடு, பசுமை பட்டாசுகள் என கூறினாலும் அதனால் ஏற்படும் காற்று மாசுவின் அளவும் ஆண்டுதோறும் தீபாவளி தினத்தன்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று அதிக மாசடைந்த மாவட்டமாக தலைநகர் சென்னை உருவெடுத்துள்ளது. தீபாவளி தினத்தன்று சென்னை மாநகராட்சியின் காற்று மாசு (AQI […]
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும் கொண்டாட சில நல்ல படங்களும் வெளியாகவுள்ளது. அது என்னென்ன படங்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அமரன் சிவகார்த்திகேயன் சினிமா கேரியரில் இந்த அளவுக்கு ஒரு படத்தின் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது என்றால் அது இந்த அமரன் படத்திற்குத் தான் என்று சொல்லவேண்டும். அந்த அளவுக்கு குடும்ப ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தினை பார்க்க […]
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர் பந்து திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தினை பார்க்க ஏற்கனவே ரசிகர்கள் கூட்டம் காத்திருந்தது என்று சொல்லலாம். அப்படி காத்திருந்ததற்கு முக்கியமான காரணமே படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் சிக்ஸர் விளாசியது தான். படத்தின் கதைக்களம் மற்றும் படத்தில் இடம்பெற்ற வசனங்கள் எனத் திரையரங்குகளில் படம் பார்த்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது […]
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர் கோயிலை சுற்றி வசிக்கும் ஏராளமான குரங்குகளுக்கு உணவு வழங்க ரூ.1 கோடி நன்கொடையை அவர் வழங்கியுள்ளார். இதற்காகவே செயல்படும் ஆஞ்சநேயா சேவா டிரஸ்ட்டுக்கு இந்த நிதியை அவர் வழங்கியுள்ளார். இவ்வாறு, பாலிவுட் சினிமாவில் ஷாருக்கான் மற்றும் அமீர்கானால் கூட முறியடிக்க முடியாத சாதனையை கிலாடி குமார் முறியடித்து உள்ளார். பல வருடங்களாக இந்த சாதனையில் நம்பர் […]
சென்னை : நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், மக்களுக்கு மத்தியில், ஆவின் பால் மற்றும் பால் உபப்பொருட்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது வரை சுமார் ரூ.115 கோடி இனிப்பு மற்றும் கார வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆவின் தரப்பில் இருந்து வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால் ” ஆவின் பால் மற்றும் பால் உபப்பொருட்கள். சுமார் 4.5 இலட்சம் […]
சென்னை : நாளை அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. எனவே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, தீபத் திருநாளாம் தீபாவளி திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் […]
சென்னை –தீபாவளி அன்று கட்டாயம் ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் மற்றும் எண்ணெய் காய்ச்சும் போது சேர்க்க வேண்டிய முக்கிய பொருள்கள் அதன் பலன்களைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது நம் பாரம்பரிய முறையாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு சிலர் எண்ணையை காய்ச்சாமல் அப்படியே தேய்த்து குளிப்பார்கள் அவ்வாறு செய்வதை காட்டிலும் நல்லெண்ணையை காய்ச்சி அதனுடன் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்த வேண்டும். தீபாவளி எண்ணெய் […]
சென்னை : தீபாவளியை முன்னிட்டு, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளதால் சென்னை ஸ்தம்பித்துள்ளது. இன்று (அரைநாள்) முதல் நவ.3 வரை தொடர் விடுமுறை வருவதால், திருச்சி, மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்ல மக்கள் தொடங்கியுள்ளனர் தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து இன்று 4,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் அரசுப் […]
புது தில்லி : தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது என்றாலே மக்கள் புதுத்துணி எடுப்பது மட்டுமின்றி தங்கம் வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவது உண்டு. தமிழகத்தில் தீபாவளிக்கு முந்திய நாட்களில் மக்கள் தங்கம் வாங்குவது போல, வட மாநிலங்களில், தீபாவளிக் கொண்டாட்டங்களில் முதல்நாளாக கொண்டாடப்படும் “தந்தேரஸ் பண்டிகை” அன்று தங்கம் வாங்க இந்த சமயங்களில் நகை வாங்க ஆர்வம் காட்டுவார்கள். தந்தேரஸ் என்றும் அழைக்கப்படும் இந்த விழா, அக்டோபர் 29, செவ்வாய்கிழமை இந்தியாவின் பல பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. எனவே, இந்த […]
தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பான முறையில் எப்படி வெடிப்பது, அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதை இந்தச் செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான். வித விதமான பலகாரங்கள், இனிப்புகள், புத்தம் புது ஆடைகள், வண்ணமயமான அலங்காரங்கள் என அடுக்கி கொண்டே போகலாம். அதிலும், குறிப்பாக குழந்தைகளுக்கு தீபாவளி என்றாலே பட்டாசு வெடிப்பது தான் அவர்களின் முதல் ஆனந்தம். புத்தாடை, இனிப்புகள் எல்லாம் அப்புறம் தான். தீபாவளி பட்டாசுகளை வெடிப்பதற்காகவே, குழந்தைகள் […]
சென்னை : வருகின்ற அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. எனவே, தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (அக்.30) பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் ” தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை (30.10.2024) முற்பகல் மட்டும் செயல்படும், பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது” என […]
புதுச்சேரி : தீபாவளியை முன்னிட்டு, தீபாவளிக்கு முந்தைய நாளான புதன்கிழமை (30.10.2024) அன்று பொது விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. செலாவணி முறிச்சட்டத்தின் கீழ், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அன்றைய நாளன்று புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாமில் உள்ள வங்கிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நவம்பர் 1 ஆம் தேதி புதுச்சேரி விடுதலை நாள் என்பதால் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், நவம்பர் 2ஆம் தேதி கல்லறை நாள், 3 […]
பீகார் : தீபாவளி, சாத் பண்டிகையின் போது பயணிகளின் நெரிசலைக் குறைக்க, கோவை – பீகார் மாநிலம் பாராவுனி இடையே இரு மார்க்கமாகவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோவையில் இருந்து வரும் 26ம் தேதி, நவம்பர் 2, 9 மற்றும் 16ம் தேதிகளில் பகல் 11.50 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக பாராவுனியில் இருந்து வரும் 29ம் தேதி, நவம்பர் 5, 12 மற்றும் 19ம் தேதிகளில் இரவு 11.45 மணிக்கு புறப்படுகிறது. ரயில் […]
சென்னை : வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில், போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், இன்று (21/10/2024) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறையை சார்ந்த அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திருக பணீந்திரரெட்டி, போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]
சென்னை : அக்டோபர் 31-ல் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் சிவசங்கர், வரும் அக்டோபர் 28ம் தேதி முதல் 3 நாட்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் மொத்தமாக 14,016 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமென அறிவித்துள்ளார். அதன்படி, சென்னையில் […]
சென்னை –தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கும் நேரம் மற்றும் தீபாவளியின் சிறப்புகளை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் தெரிந்து கொள்வோம் . தீபாவளி 2024; ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் வரும் அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் [ஐப்பசி மாதம் 14]அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. சில சமயங்களில் தீபாவளி பண்டிகை அமாவாசை அன்றும் சில சமயங்களில் அமாவாசைக்கு முதல் நாளும் வரும். அந்த வகையில் இந்த ஆண்டு அம்மாவாசை […]
சென்னை : சந்தைகளில் ஐ-போன்களுக்கு இணையாக தற்போது விற்பனையாகும் பிராண்ட்களில் ஒன்று தான் iQ போன். என்னதான் சாம்சங், ஒன் ப்ளஸ் போன்ற பிராண்ட் போன்கள் இருந்தாலும் iQ போன்களுக்கென ஒரு வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக iQ போன்களை விரும்பும் வாடிக்கையாளர்கள் அதிகமாக “iQOO 12” மாடலை வாங்கவேண்டும் என்று கூறி வருகிறார்கள். அதற்கான முக்கிய காரணமாக விலை அதிகமாக இருந்தாலும், அதற்கு ஓர்த்தாக சிறப்பு அம்சங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில், அதனுடைய சிறப்பு அம்சங்கள் என்ன […]
நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து தனது மகள் இயக்கத்தில் வெளியான லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படங்களை தொடர்ந்து அவர் தற்போது ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனரான டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபோசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷ்ரா விஜயன், […]