டெல்லியில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் 5 மில்லியன் கிலோ பட்டாசுகள் வெடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. மேலும் குறிப்பிட்ட டெசிபல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க தடையும் விதிக்கப்பட்டது. தலைநகர் டெல்லி ஏற்கனவே காற்று மாசு காரணமாக பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு பெருமளவு பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மொத்தமாக பதுக்கப்பட்ட பட்டாசுகள் […]
டெல்லியில் தடையை மீறி சிறுவன் பட்டாசு வெடித்ததால் அவனது தந்தையை போலீசார் கைது செய்தனர். டெல்லி காசிப்பூர் பகுதியை சேர்ந்த சிறுவன் கடந்த 1-ம் தேதி தந்தை வாங்கிகொடுத்த பட்டாசுகளை வெடித்துக்கொண்டிருந்தான். அப்போது அதிகமான சத்தம் தரக்கூடிய பட்டாசுகளையும், புகை எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடித்தாக கூறப்படுகிறது. டெல்லியில் ஏற்கனவே காற்று மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில், சிறுவனை பட்டாசுகளை தவிர்க்குமாறு பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர்கள் கூறியுள்ளனர். அவர்களின் பேச்சை கேட்காமல் சிறுவன் அதிகம் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை […]
சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு படி தமிழகத்தில் எந்த 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க வேண்டுமென தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பட்டாசுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தீபாவளி பண்டிகை அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என்று சுப்ரீம்கோர்ட்டு கடும் நிபந்தனைகளை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தமிழகத்தில் தீபாவளி […]
நரகாசுரனை வதம் செய்ததற்காக தீபாவளியை கொண்டாடுகிறோம். பிற மாநிலங்களில் எதற்காக கொண்டாடுகிறார்கள், வெளிநாடுகளில் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை சொல்கிறது. திரும்பிய திசைகளெல்லாம் கண்களுக்கு விருந்தாய் கலர் கலரான வாணவேடிக்கை. செவிகளுக்குள் புகுந்து வெளியேறும் ‘டமால், டுமீல்’ பட்டாசு சப்தம். நாசியை தழுவிச் செல்லும் கந்தக மணம். உடலை அணைத்திருக்கும் புத்தம்புது ஆடை. வாய் நிறையும் இனிப்பு. மனம் கொள்ளா மகிழ்ச்சி. இவைகள் அனைத்தும் ஒரே நாளில் சாத்தியம் என்றால் அது தீபாவளி திருநாளில் மட்டுமே. இன்றைய தினம், […]
அதிரடி வேட்டுச் சத்தம் அரைகுறை எண்ணெய் குளியல் சரசரக்கும் புத்தாடை கசகசக்கும் வியர்வை நமுத்துப்போன புஸ்வாணம் அடுத்த வீட்டின் அதிகவெடிச் சத்தம் ஆங்காங்கே கையில் சூடு அழகான பெண்கள் கூட்டம் கிடைக்காத ‘ஆதவன்’ டிக்கெட் அயர்ச்சி தரும் ‘வித்தியாசமான’ படங்கள் அலுக்கவைக்கும் வெட்டிமன்றம் பழகிப்போன புதுமுகங்கள் ட்விட்டரில் க்ரீட்டிங்ஸ் நான்ஸ்டாப் செல்போன் ஒலி அவ்வப்போது ‘சாட்டிங்’ க்ரீட்டிங்க்ஸ் அலுக்காத நண்பர்கள் கூட்டம் கொஞ்சூண்டு குட்டித் தூக்கம் கொஞ்சமாய் அஜீரணம் மறந்து விட்ட நரகாசுரன் மறக்காமல் ‘கங்கா ஸ்நானம்’! […]
தீபாவளி இந்த ஆண்டு நவம்பர் 7-ம் தேதி நாடெங்கும் கொண்டாடப்பட உள்ளது. அதற்காக தலைநகர் டெல்லியில் உள்ள மார்கெட்டில் பட்டாசுகளை வாங்கும் மக்கள் குவிந்து வருகின்றனர்.அனைவருக்கும் பிடித்த வகை வகையான பட்டாசுக்களை மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர். dinasuvadu.com
47 ரெயில்களில் சிறப்பு கட்டணத்தை ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது. 101 ரெயில்களில் சிறப்பு கட்டணத்தை குறைத்துள்ளது. கடந்த 2016–ம் ஆண்டு செப்டம்பர் 9–ந் தேதி, முக்கியமான ரெயில்களில் ‘பிளெக்ஸி பேர்’ என்ற பெயரில் சிறப்பு கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டது. 44 ராஜதானி ரெயில்களிலும், 52 துரந்தோ ரெயில்களிலும், 46 சதாப்தி ரெயில்களிலும் இந்த திட்டம் அமலுக்கு வந்தது. இதன்படி, இந்த ரெயில்களில் ஒவ்வொரு 10 சதவீத படுக்கைகள் நிரம்பியவுடன், அடிப்படை கட்டணம் 10 சதவீதம் உயரும். இதுபோன்று, […]
தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கி உள்ளது. தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக 20000-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவுகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நவம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் 11,367 சிறப்பு பேருந்துகள், மற்ற மாவட்டங்களில் இருந்து 9,200 பேருந்துகள் என 20,567 சிறப்பு பேருந்துகள் தீபாவளி பண்டிகைக்காக […]
தீபாவளியன்று தமிழகத்தில் காலை 4 மணி முதல் 5 மணிவரை, இரவில் 9 மணி முதல் 10 மணிவரை பட்டாசு வெடிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது. தீபாவளி அன்று கூடுதல் நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு வருகிறது. தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு […]
2 மணி நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் தீபாவளிக்கு இரண்டு மணி நேரமே பட்டாசு வெடிக்க வேண்டும்மென்று நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றம் கூறிய இரண்டு மணி நேரம் எது என்று விளக்கும் வகையில் இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நேற்று 2 மணி நேரமே பட்டாசு வெடிக்கலாம் என்ற அறிவிப்பில் இன்று உச்சநீதிமன்றம் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் காலை 4 மணி முதல் 5 மணி வரையும் , இரவு […]
தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களின் கட்டணம் இருமடங்கு உயர்ந்து இருப்பதாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் வேதனை தெரிவித்தனர். தீபாவளி பண்டிகை வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. செவ்வாய்க்கிழமையில் தீபாவளி பண்டிகை வருவதால் தொடர் விடுமுறை இருக்காது என்று பலரும் நினைத்து இருந்த நிலையில், வருகிற 5-ந்தேதி (திங்கட்கிழமை) பொது விடுமுறை என்று அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பினால் தொடர் விடுமுறை சாத்தியம் ஆகி இருக்கிறது. இதனால் வருகிற 2-ந்தேதி(வெள்ளிக்கிழமை) இரவு முதலே சொந்த […]
தாரை தப்பட்டை படம் மூலம் மிரட்டலான வில்லனாக தமிழ்சினிமாவில் களமிறங்கியவர் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ். இவர் அதனை தொடர்ந்து மருது போன்ற படங்களில் வில்லனாகவும், கடைக்குட்டி சிங்கம்.படத்தில் தனது மிரட்டலான குரலின் மூலம் வில்லதனத்தை காட்டியவர். இவர் தற்போது ஹீரோவாக களமிறங்கயுள்ள திரைப்படத்திறக்கு பில்லா பாண்டி எனப்பெயரிடபட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் சுரேஷ், தல அஜிதின் தீவிர ரசிகராக நடித்து வருகிறார். இத்திரைபடம் வருகிற தீபாவளி தனத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதே தினத்தன்று தளபதி விஜய் நடிப்பில் […]
தீபாவளிக்கு இரவு 10 மணிக்கு மேல் தான் பட்டாசு வெடிப்பேன் என பா.ஜ.க. எம்.பி தெரிவித்துள்ளார். தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது.இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. சிந்தாமணி மாளவியா, ‘நான் தீபாவளி அன்று இரவு 10 மணிக்கு மேல் தான் பட்டாசு வெடிப்பேன்’ என தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் […]
தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியாக உள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து உள்ளது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். விஜய் படம் வருகிறது என்றாலே மற்ற படங்களுக்கு வரவேற்பு இருக்காது ஆதலால் பலரும் இந்த போட்டியை தவிர்த்து விடுவர். ஆனால் இந்த போட்டியை சந்திக்க ஏற்கனவே விஜய் ஆண்டனியின் திமிரு பிடிச்சவன் தயாராகிவிட்டது. இப்படத்துடன் தற்போது அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகிவரும் களவாணி மாப்பிள்ளை திரைப்படமும் தற்போது தீபாவளி ரேசில் களமிறங்கியுள்ளது. இதனை […]
நடிகர் விஜயின் சர்கார் படத்தோடு திரையரங்கில் சண்டையிட வரும் படங்களின் லீஸ்ட் பற்றிய தகவல் தெரியவந்ததுள்ளது. (2018) இந்த ஆண்டு தீபாவளிக்கு நடிகர் அஜித், விஜய், சூர்யாவின் ஆகியோர்களின் டங்கள் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக நடிகர் அஜித்தின்பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வாசம் மற்றும் நடிகர் சூர்யாவின் என்ஜிகே உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படம் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகியுள்ள நிலையில், படத்தின் பின்னணி […]
இந்த வருட தீபாவளிக்கு தளபதி விஜய் நடிப்பில் சர்கார் வருவது உறுதியாகியுள்ளது. ஆதலால் மற்ற படங்கள் விஜய்யோடு மோதுவதை தவிர்த்து ரிலீஸ் தேதியை மாற்றியமைத்து வருகின்றனர். இருந்தும் சில படங்கள் மோத தயாராகிவருகின்றன. அதில் முக்கியமான படம் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் திமிரு புடிச்சவன் திரைப்படம். இப்படத்தில் விஜய் ஆண்டனி போலிஸாக நடித்துள்ளார். இப்படத்தில் நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடித்துள்ளார். டேனியல் பாலாஜி வில்லனாக நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாவதை படக்குழு உறுதி செய்து […]