விவாகரத்தான பெண்ணை ஏமாற்றியவர் மீது வழக்கு..!
விவாகரத்தான பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய ஆனந்த் சர்மா மீது கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு. கோவை மாவட்டம் பீளமேட்டில் வசிக்கின்ற பெண் ஒருவர் துபாயில் பணிபுரிந்து இந்தியா திரும்பியவர்.இவர்,கணவனை பிரிந்து மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.அந்த பெண்ணுக்கு தொழில் ஆர்வம் அதிகமாக இருந்ததால்,தொழில் ரீதியான விவரங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த காரணத்தை பயன்படுத்தி,சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் உயர்அதிகாரியாக பணியாற்றிய ஆனந்த் சர்மா என்பவர் அவரை தொடர்பு கொண்டார். […]