சிறப்பு ஆயுதப்படை சட்டத்தின் கீழ் அடுத்த 6 மாதங்களுக்கு நாகலாந்தை பதற்றமான பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் பல ஆண்டுகளாக உள்நாட்டு ஊடுருவல், பதற்றம் போன்ற காரணங்களால் அமைதியற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் 1958-ம் ஆண்டு சிறப்பு ஆயுதப்படை சட்டத்தின் கீழ் நாகாலாந்து மாநிலம் முழுவதையும் பதற்றம் நிறைந்த பகுதியாகவும், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு நாகாலந்தை பதற்றமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.