தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்கிறார். முதல்வர் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டில் முதல் வருகையை முன்னிட்டு, இன்று ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு மேற்கொண்ட அவர், மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
திருச்சி மாவட்டத்திற்கு ஜனவரி 2-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு ஜனவரி 2-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறைக்கு பதில் ஜனவரி 7-ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக கடைபிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி – ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் மார்கழி மாதத்தில் 20 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி […]
பனங்காட்டுப் படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு. பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தில் அடைக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நெல்லையைச் சேர்ந்த சாமித்துரை என்பவரை கொலை செய்த வழக்கில் கடந்த 7ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டார். தற்போது கோவை சிறையில் இருக்கும் ராக்கெட் ராஜா மீது 5 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், ராக்கெட் […]
தொடர்ந்து விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு விதிமுறை மீறல்களை கண்டறிய சிறப்பு ஆய்வுக்குழுவை நியமித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். தொடர்ந்து விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வரும் 25-ஆம் தேதி வரை தினசரி ஆய்வு நடத்தி விதிமுறைகள் மீறல்களை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் […]
கொல்லிமலை வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. நாமக்கல் மாவட்டத்திற்கு கொல்லிமலை வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் அறிவித்துள்ளார். இதுபோன்று கொல்லிமலையில் ஆகஸ்ட் 1 முதல் 3-ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கொல்லிமலை செம்மேடு, சோளக்காடு, செங்கரையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த செல்வகுமார் பணியிடை மாற்றம். தனியார் பள்ளி மாணவி மரணம், இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தின் எதிரொலியாக கள்ளக்குறிச்சி எஸ்பிஐ செல்வகுமார் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராக இருந்த பகலவன் கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய எஸ்பியாக நியமனம் செய்து உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். […]
தேனியில் மங்களதேவி கண்ணகி கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை. இதுதொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று தமிழகம் மற்றும் கேரள பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக தமிழகம் மற்றும் கேரள பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், நாளை நடைபெறும் பாரம்பரிய வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா அன்று தேனி மாவட்டத்திற்கு உள்ளுர் […]
சித்திரைப் பெருவிழா முன்னிட்டு அன்னதானத்துக்கு உணவுத்துறை அனுமதி அவசியம் என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு ஏப்ரல் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு, கள்ளழகர் மண்டகப்படிகளில் அன்னதானம் வழங்குவதால் மற்றும் பக்தர்களால் வழங்கப்படும் பிரசாத உணவுகள் உள்ளிட்டவை பாதுகாப்பான உணவாக செயற்கை சாயங்கள் எதுவும் […]
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வது தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கருத்துகேட்பு கூட்டம். தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் திறக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் கூறியிருந்தார். இதையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்து, இவ்வழக்கு இன்று மீண்டும் […]
தேர்தல் நடத்தும் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை பிற்பகல் 3 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தின் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் இரண்டு கட்டங்களாக நடத்த வாய்ப்பு என நேற்று தகவல் வெளியான நிலையில், இது குறித்து விளக்கம் அளித்த […]
காணொளி மூலம் முதல்வர் பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நிறைவுபெற்றது. இதையத்தொடர்ந்து மருத்துவர் நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 5 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், காணொளி காட்சி மூலமாக முதலமைச்சர் பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை தற்போது நிறைவடைந்தது. மேலும் […]
தூத்துக்குடியில் 14 கண்மாய்கள் 7 கோடியில் தூர் வாரி சீரமைப்பு பணிகளை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள குலையன்கரிசல் பொட்டை குளத்தின் இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியில் 20 லட்சம் செலவில் தூர் வாரி கரைகளை பலப்படுத்த கூடிய பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் தூத்துக்குடியில் தென்மேற்கு பருவமழை காலத்தில் […]
ஒவ்வொரு ஆண்டும் தென்மாவட்டத்தில் வைகுண்டரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகின்றது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகின்ற மார்ச் 4_ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கி.பி.1809-ஆம் ஆண்டு இந்தியாவின் தென்கோடியான குமரி மாவட்டத்திலே தாமரைகுளம் என்னும் சிற்றூரில், பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியருக்கு மகனாக ஒரு குழந்தை பிறந்து தென் மாவட்ட மக்களால் கடவுளாக வணங்கப்பட்டவர் ஐயா வைகுண்டர் இந்நிலையில் ஐயா வைகுண்டரின் பிறந்த நாள் வருகின்ற 4_ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இதில் தென் மாவட்ட பகுதி மக்கள் வைகுண்டரை வணங்கி அவருக்கு படையல் வைத்து வழிபடுவார்கள். […]
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறிய நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியதாவது , உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு செய்துள்ள மேல்முறையீடு பதிவாகி அனைவரும் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டபட்டுள்ளது . அதோடு உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று சொல்லவில்லை . தொடர்ந்து இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெறும்.உச்சநீதிமன்ற உத்தரவு இன்னும் முழுமையக கிடைக்க வில்லை என்று தெரிவித்தார்.