தமிழகத்தில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 5 மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் அமைக்க உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக,அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழக சட்டமன்றப் பேரவையில் கடந்த 08.09.2021 அன்று நடைபெற்ற 2021-22-ஆம் நிதியாண்டிற்கான பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக்கோரிக்கையின் போது மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்களால் கீழ்க்காணும் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது: சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் 5 […]