தலையில் தாக்க கூடாது என நடுவர்கள் எச்சரித்தும் கேட்காததால், பிரான்ஸ் குத்துச்சண்டை வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான குத்துச்சண்டையில் சூப்பர் வெவி வெயிட் பிரிவுக்கான காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்தை சேர்ந்த பிரேசர் கிளார்க் மற்றும் பிரான்சை சேர்ந்த மௌராட் ஆலிவ் ஆகியோருக்கு பலப்பரீட்சை நடந்துள்ளது. முதல் சுற்றிலேயே பிரான்ஸ் வீரர் இங்கிலாந்து வீரரை ஆக்ரோஷமாக தலையில் குறிவைத்து தாக்கியதால் இங்கிலாந்து வீரர் நிலை குலைந்துள்ளார். […]