சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் அமைந்துள்ள டிஸ்னிலேண்ட் மெகா தீம் பார்க் இன்று மூடப்பட்டது. “கொரனா வைரஸ்” பரவுவதை தடுக்க மூடியதாகவும் , முன்பதிவு செய்வர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதாகவும் அந்த பார்க் நிர்வாகம் கூறியுள்ளது. சீனாவில் “கொரனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் முதலில் சீனாவில் உள்ள வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. […]