முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சுழல்பந்து பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் உள்ளார். ஹைதராபாத் அணி தற்போது சென்னையில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நேற்று பயிற்சியின் போது முரளிதரனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் ரத்த குழாயில் அடைப்பு இருந்தது. இதனால், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முரளிதரனுக்கு ஆஞ்சியோ […]
பிசிசிஐ தலைவரும், இந்தியாவின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி ஜன.6 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி 2-ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கங்குலி இதயத்தில் இரண்டு அடைப்புகள் உள்ளது என்றும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, கங்குலி விரைவில் மீண்டு வரவேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், லேசான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட […]
மேட்டூர் அணை நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியிலிருந்து 10 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் நீர்வரத்து கடந்த சில தினங்களாக அதிக அளவில் இருந்து வந்தது. காவிரி டெல்டா பாசனத்திற்காக 1000 அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்ட நிலையில், 14 ஆயிரத்து 947 கன அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து இன்று 10 ஆயிரத்து 28 கன அடியாக குறைந்துள்ளது. தற்பொழுது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.66 அடியாகவும் நீர் […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பொருளாளர் பிரேமலதாவும் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருடைய மனைவியும் அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதாவிற்கும் அண்மையில் கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டதை அடுத்து அவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இருவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மியாட் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
உள்துறை அமைச்சர் அமித்ஷா மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடந்த 2-ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மெதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 14-ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். பின்னர், உடல் சோர்வு , உடல் வலி போன்ற காரணங்களால் கடந்த 18-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து உள்துறை […]
இந்தியாவில் கொரோனாவிலிருந்து 20.96 லட்சம் பேர் குணமடைந்தனர். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமேரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில உள்ளது. இந்நிலையில், இந்தியாவை பொறுத்தவரையில், கடந்த 24 மணி நேரத்தில், 69,652 பேருக்கு […]
தமிழகத்தில், இதுவரை 16,395 பேர் குணமடைந்துள்ளனர் தமிழகத்தில், மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் 1,458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 16,395 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது. சென்னையில் இதுவரை 10,572 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 251 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 10 பேர் தனியார் மருத்துவமனையிலும், 9 பேர் அரசு மருத்துவமனையிலும் […]
தமிழகத்தில், கொரோனா பாதிப்பிலிருந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 9342 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாய் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் மொத்த கொரோனா பாதிப்பு 17,728 ஆக உயர்ந்துள்ளது. இன்று 9 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 11,640 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் […]
இன்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் கிட்டத்தட்ட 987 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் பாதித்தோரின் எண்ணிக்கை 13191 ஆக உயர்ந்துள்ளது. இன்று 3 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 8,228 ஆக அதிகரித்துள்ள நிலையில், 59 பேர் உயிரிழந்துள்ளனர் […]
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 30,64,838 பேரில் 9,22,403 பேர் வைரஸில் இருந்து குணமடைந்து உள்ளார்கள். சீனா உஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் அந்நாட்டை புரட்டிப்போட்டது. பின்னர் பரவ தொடங்கிய வைரஸ் சுமார் 200 நாடுகளை தற்போது மிரட்டி வருகின்றது. இதன் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அப்படி இருந்தாலும் வைரஸின் தாக்கம் குறையாமல் நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து […]
தமிழகத்தில் ஒரே நாளில் 178 பேர் வைரஸில் இருந்து குணமடைந்து, மொத்தம் இதுவரை 635 பேர் வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் ஒரே நாளில் 178 பேர் வைரஸில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 635 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கரூரில் 48, கோவையில் 31, சென்னை ஸ்டான்லியில் 26 பேர் என மொத்தம் 178 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டன. இன்று மேலும் 76 பேருக்கு கொரோனா […]
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து 20 பேர் வீடு திரும்பினர். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது தொடர்ந்து, மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றானது 210-க்கும் மேற்பட்ட நாடுகளை ஆக்கிரமித்துள்ள நிலையில், இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்றினால் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தொற்று தமிழகத்திலும் பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் தொற்றினால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள […]
கரூர் அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை பெற்று வந்த 43 பேர் டிஸ்சார்ச். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸ் நோயானது தற்போது தமிழகத்திலும் ஆயிரக்கணக்கானோரை பாதித்துள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து […]
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிற நிலையில், சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுகுறித்து குணமடைந்த ஒருவர் கூறுகையில், மருத்துவர்களும், செவிலியர்களும் எங்களை கனிவாக நடத்தினார்கள் என கூறியுள்ளார்.