கனமழை மீட்புப்பணிகளில் ஈடுபட மொத்தமாக 396 மீட்புப்படை வீரர்கள் 12 குழுக்களாக பிரிந்து 10 மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் நாளை இரவு கரையை கடக்கும் என்பதால் இன்று மிதமான மழை பெய்யவும், நாளை முதல் பெரும்பாலான கனமழை பெய்யவும் , வடதமிழகத்தில் அதிகனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து, கனமழையை எதிர்கொள்ள முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தலைமை செயலர் இறையன்பு தலைமையில் முக்க்கிய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். […]