சென்னை: கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் முழு வீச்சில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் அவசர கடிதம் அனுப்பியுள்ளது. அதன்படி, […]
புயல் கரையை கடக்கும் சமயத்தில் மொட்டை மாடியில் நிற்க கூடாது, தேவையற்ற பயணத்தை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை அரசு வழங்கியுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று மாலை கரையை கடக்க உள்ளதால் பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்க தமிழக பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, புயல் கரையை கடக்கும் சமயத்தில் மொட்டை மாடியில் நிற்க கூடாது, தேவையற்ற பயணத்தை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும், கடற்கரைக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும், பழைய […]