ஆந்திரா:வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. ஆந்திரப்பிரதேசத்தில் கடந்த இரண்டு வாரமாக கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,சித்தூர், கடப்பா, நெல்லூர் மற்றும் அனந்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் அதிக கனமழையால்,குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனையடுத்து,நெல்லூர் மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டர் மூலம் […]
பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 16 மாவட்டங்களில் 83 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பீகாரில் மாநிலத்தில் தர்பங்கா மற்றும் முசாபர்பூர் ஆகிய இரு மாவட்டமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தன. கோபால்கஞ்ச் மாவட்டத்திலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பீகாரில் வெள்ள நிலைமை நேற்று கடுமையாக இருந்தது, கடந்த 24 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் கூடுதலாக 1.13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 82. 92 லட்சம் என்று பேரிடர் மேலாண்மைத் துறை […]