இயற்கை பேரிடரால் பாதிக்கப்பு ஏற்பட கூடிய வாய்ப்புள்ள இடங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசு தான் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல். 2018இல் தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடரான காஜா புயலில் தமிழக மீனவர்களின் படகுகள் சேதமனடைந்தது. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மீனவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினர். அவர் கூறுகையில், இயற்கை பேரிடரால் […]
பிற மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையிலும்,அவர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழையும் போது,அவர்களைக் கண்டறிந்து கட்டாயம் பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். ஒமைக்ரான் வைரஸ் பரவத் துவங்கினால் மீண்டும் ஒரு பேரிடரை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள் என்றும், எனவே,தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனிக் கவனம் செலுத்தி, ஒமைக்ரான் பரவலை வெகுவாகக் கட்டுப்படுத்திட ஏதுவாக வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலமாக தமிழ்நாட்டிற்குள் நேரடியாக வருபவர்களையும்,வேறு மாநிலத்திற்கு விமானம் மூலமாக வந்து தரை வழியாகவோ […]
பேரிடர் காலங்களில் பொது மக்கள் ஆபத்துகள் குறித்து தகவல் தெரிவிக்க தனியாக ஒரு வாட்ஸ்-அப் எண்ணை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. பேரிடர் காலங்களில்,பொதுமக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் பேரிடர் ஆபத்துகள் குறித்த தகவல்களை தெரிவிக்க,பேரிடர் முன்னெச்சரிக்கை மேலாண்மைக்கென தனி வாட்ஸ்-அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே,இதைப் பயன்படுத்தி மக்கள்,பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும்,இதுதொடர்பாக, அமைச்சர் இன்று வெளியிட்டுள்ள […]
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி செக்டாரில் உள்ள எல்லைக்கோடு பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ராணுவ வீரர்கள் இருவர் சிக்கிக்கொண்டனர். உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். இதில் ராணுவ அதிகாரி ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். மற்றொரு ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த ராணுவ அதிகாரி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்