அரசுப் பணிக்கான அடிப்படை பயிற்சி பெறுவதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், பார்வை?, செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி அரசுப்பணியாளர்கள் அடிப்படை பயிற்சி பெற வேண்டாம். பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் பார்வை, செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி பயிற்சி பெற வேண்டாம் என்றும் அதே சமயம் ஊன்றுகோல் உதவியுடன் நடப்போர், சக்கர நாற்காலி உதவியுடன் நடப்போர் பயிற்சி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் உள்ள குள்ளமான மனிதர்களுக்கான தடகள போட்டியானது டோர்னோடோவில் நடந்தது.இந்த விளையாட்டில் இந்தியா சார்பில் சுமார் 50 வீரர்கள் பங்கேற்றனர் .இப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீரர்கள் சுமார் 37 பதக்கங்களை வென்றனர்.முதல் முறையாக இந்தியா சர்வதேச அளவிலான போட்டியில் அதிக பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து இந்தியளவில் உள்ள முதன்மையான ஊடகங்கள்யாவும் செய்தி வெளியிடாமல் மறைத்துள்ளனர்.இது போன்று குறைபாடுகள் உள்ளோர் நிகழ்த்தும் சாதனைகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்து அவர்களை நாம் பெருமைபடுத்தாமல் வேற யார்தான் பெருமை […]
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 2014 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று காதுகேளாத வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமியை சில சமூக விரோதிகள் கூட்டு பாலியல் வல்லுறவு செய்தனர். ஆளும் அதிமுக-வின் செல்வாக்கோடு செயல்படும் இந்த சமூகவிரோத குற்றவாளிகளில் அந்த ஊராட்சியின் வார்டு கவுன்சிலரான சித்தலிங்கா என்பவரும் அடக்கம். இந்த வழக்கில் ஆரம்பம் முதல் குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கில் உள்ளூர் ஊர்தலைவர்கள், காவல்துறை, மருத்துவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டது. சுமார் ஒருவார […]