பள்ளிக்கல்வித்துறையில், 2 இயக்குனர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தாலும், பள்ளிக்கல்வித்துறை தங்களது பணிகளை திறம்பட வருகிறது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறையில், 2 இயக்குனர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் நிறுவன இயக்குனர் நாகராஜா முருகன், பாடநூல்கழக செயலாளராகவும், பாடநூல் கழக செயலாளர் லதா, ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.