பொறியியல் படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீட்டின்கீழ் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்று பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த மாதம் அறிவித்திருந்தது.மேலும்,அவர்களுக்கான செலவை அரசே ஏற்கும் என்றும்,இதற்காக ரூ.200 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில்,7.5% உள் இட ஒதுக்கீட்டின்கீழ் நடைபெறும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு […]
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ரேண்டம் எண் இன்று வெளியாகிறது. கொரோனா பரவல் காரணமாக +2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர்.இதனையடுத்து, நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான பணிகளைத் கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தொடங்கியது.அந்த வகையில்,பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நேற்றுடன் நிறைவுபெற்றது. இந்நிலையில்,பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்படுகிறது.அதன்படி,பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு ரேண்டம் […]
முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகளை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் அவர்களது செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் – […]