இந்தியாவில்,மதிய உணவு திட்டத்தின் மூலமாக 11.8 கோடி மாணவர்களுக்கு,அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது தீவிரமடைந்த நிலையில்,பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதன்காரணமாக,பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தினால் பயனடையும் கோடிக்கணக்கான மாணவர்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில்,மாணவர்களின் கவலையை போக்கும் வகையில்,தற்போது மத்திய அரசு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.அதாவது,நாடு முழுவதும் உள்ள 11.8 கோடி மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடி பணப் பறிமாற்ற […]