தொகுதி பங்கீடு குறித்து நாளை மறுநாள் திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு குறித்து வரும் பிப் 24-ஆம் தேதி திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் உம்மன் சாண்டி, கர்ஜேவாலா உள்ளிட்ட மேலிட பார்வையாளர்களும் பங்கேற்கின்றனர் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சந்திக்கிறார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது .தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.இதனிடையே அண்மையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக அமரவைக்க காங்கிரஸ் பாடுபடும் என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.மேலும் தேர்தல் தொகுதி பங்கீடு […]
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,சட்டப் பேரவைத் தேரதலில் தொகுதிகளுக்காக திமுகவிடம் பேரம் பேசமாட்டோம் என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது .தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,தேர்தல் தொகுதி பங்கீடு […]
அகில இந்திய காங்கிரஸ் குழுவின் பொதுச் செயலாளர்களையும், பொறுப்பாளர்களையும் காங்கிரஸ் நியமித்துள்ளது. குலாம் நபி ஆசாத், அம்பிகா சோனி, மோதி லால் வோஹ்ரா, லூசெனியோ ஃபாலேரியோ, மல்லிகார்ஜுன் காட்ஜ் ஆகியோர் பொதுச் செயலாளர்கள் பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, கோவா மாநிலங்களுக்கான காங்கிரஸ் கட்சி மேலிட பொறுப்பாளராக கர்நாடகத்தை சேர்ந்த தினேஷ் குண்டு ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர் எம்.பி. ஜோதிமணி உட்பட 5 பேர் காங்கிரஸ்தேர்தல் குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், […]