அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் ஓப்பனிங் பாடலிற்கு நடன ஆசிரியராக தினேஷ் மாஸ்டர் பணியாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தில் ஹூமா குரேஷூ நாயகியாகவும் ,கார்த்திகேயா வில்லனாகவும், அம்மாவாக நடிகை சுமித்ராவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் யோகி பாபு,பேர்லி மன்னி,குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு […]