அதிமுக சார்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை பரிசளித்து இருந்தார். இந்த கவசமானது மதுரை அண்ணா நகர் வங்கியில் பாதுகாக்கப்பட்டு வரும். ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தியின் போது அதிமுக பொருளாளர் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர் இணைந்து கையெழுத்திட்டு கவசத்தை வங்கியில் இருந்து எடுத்து வந்து பசும்பொன்னார் சிலைக்கு அணிவித்து பின்னர் மீண்டும் வங்கியில் ஒப்படைக்கப்படும். அதிமுக பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பில் இருந்த காலத்தில் […]
அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர்,பொருளாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளதாக பொதுக்குழு அறிவித்தது.நத்தம் விஸ்வநாதன் கொண்டு வந்த சிறப்பு தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில்,அதிமுகவின் கோட்பாடுகள் மற்றும் கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம்,மனோஜ் பாண்டியன், ஜெசிடி பிரபாகர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து,தன்னை அதிமுகவில் இருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை எனவும்,இபிஎஸ் ,கே.பி.முனுசாமியை அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார். […]
தமிழகத்தில் 100-க்கு 95% பேர் செல்போன் வைத்திருந்ததால் வீணாகக் கூடாது என்பதால் நாங்கள் வழங்கவில்லை என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அனைவரும் அவர்கள் வீடுகளுக்கு முன் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் […]
கட்சியில் எந்த குழப்பமும் இல்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியது அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், அதிமுக கட்சியும், ஆட்சியும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் அருமையாக நடந்து வருகிறது. கட்சியில் எந்த குழப்பமும் இல்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ராஜன்செல்லப்பாவின் கருத்திற்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியது அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறுகையில்,ராஜன்செல்லப்பாவின் கருத்திற்கு பதில் சொல்ல விரும்பவில்லை . அதிமுக தற்போது இரட்டை தலைமையில், ஆளுமையுடன் செயல்பட்டு வருகிறது.மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு அதிமுக என்றும் ஒத்துழைக்காது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் […]
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக கூட்டணிகள் அறிவிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அதிமுக ஆலமரம் போல் வளர்ந்துள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்து பாஜக_விற்கு 5 , பாமக_விற்கு 7 தொகுதி மற்றும் புதுச்சேரியில் N.R காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்து இறுதிபடுத்தபட்டுவிட்டது.அதே போல திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதியும் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் திருவாரூரில் மறைந்த […]