திண்டுக்கல் : அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குதிரையாற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதல் வெல்ல அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. பருவமழை தொடங்கி தமிழகத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் தீவிரமடைந்து வரும் நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளையும் தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், திண்டுக்கல்லில் பழனி வட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு அமைந்துள்ள குதிரை அணியின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் அங்கு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு […]
திண்டுக்கல் : கேரள மாநிலம் வயநாட்டில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தால் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தற்போது வரையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. வயநாடு பகுதி மக்கள் தங்கள் வீடுகளை , உடமைகளை இழந்து தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க போராடும் நிலையில் உள்ளனர். வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மாநில அரசுகள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், தன்னார்வலர்கள் என பலரும் தங்களால் இயன்ற நிதியுதவி மற்றும் பொருளுதவிகளை அளித்து வருகின்றனர். […]
CPM : திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. Read More – 15 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியல்… பாஜகவிடம் கொடுத்த ஓபிஎஸ்! திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 10, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 , மதிமுகவுக்கு 1, கொமதே […]
சமீபத்தில் காமராஜருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாகக் கூறப்படும் நிலையில், இதற்கு அதிமுகவினர் எதிர்வினையாற்றி வருகின்றனர். அந்தவகையில், கர்மவீரர் காமராஜரும் பிரதமர் மோடியும் ஒன்னா.? என்பது பொதுமக்களுக்கே நன்றாகவே தெரியும் என அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார். திண்டுக்கலில் புதிதாக சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசனிடம், காமராஜருடன் மோடியை ஒப்பிட்டு அண்ணாமலை பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு […]
திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் லஞ்சமாக ரூ.51 லட்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கையும், களவுமாக கைது செய்யப்பட்டார். சொத்துகுவிப்பு தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க மருத்துவர் சுரேஷ் பாவிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கைது செய்யப்பட்டார். மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் அவர் மீதான வழக்கை முடித்து தருவதாக கூறி, முதலில் ரூ.20 லட்சம் பெற்ற நிலையில், மீதமுள்ள ரூ.31 லட்சத்தை வாங்கியபோது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கினார். பணத்துடன் […]
குண்டர் தடுப்பு சட்டத்தை காவல்துறையினர் இயந்திரத்தனமாக செயல்படுத்தி உள்ளனர் என நீதிபதிகள் குற்றச்சாட்டு. கொலை வழக்கில் கைதான திண்டுக்கல்லை சேர்ந்த 5 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஸ்ரீதர், ராஜ்குமார், ராஜேஸ்வரன், கருணாகுமார், ரஞ்சித் ஆகியோர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. குண்டர் தடுப்பு சட்டத்தை காவல்துறையினர் இயந்திரத்தனமாக செயல்படுத்தி உள்ளனர் என்றும் குண்டர் தடுப்பு காவல் விதிகளை மனதில் கொள்ளாமல் […]
சுமைதூக்கும் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது திண்டுக்கல் நீதிமன்றம். முத்தழகுபட்டியை சேர்ந்த செபஸ்தியாரை முன் விரோதத்தால் கடந்த 2014-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி 10 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொன்றது. வழக்கை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் அந்தோணி விமல், சின்னப்பராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. அருள் ஆரோக்கிய தாஸ், தங்கம், ஜஸ்டின் தாஸ், ஜான் பிரபாகர், விக்னேஷ் இன்பராஜ், தாமரைக்கண்ணன் ஆகியோருக்கும் […]
சித்தரேவு கிராமத்திலுள்ள உச்சி காளியம்மன், செல்வ விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி கோரிய வழக்கில் உத்தரவு. பழனி அருகே செல்வா விநாயகர், உச்சிகாளியம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் சென்று வழிபட உயர் நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக கூறி பட்டியலின மக்கள் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் திண்டுக்கல் ஆட்சியர், புகாருக்குள்ளான மோதில்ராம், சின்னசாமி மற்றும் ராமசாமி பதில்தர வேண்டும் […]
பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்ப பெறும் மையங்களை அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. உதகை, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்ப பெறும் மையங்களை உடனடியாக அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்ப பெறும் மையங்களை அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மேலும், உதகை, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படவில்லை என்பதை உறுதி செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிளாஸ்டிக் […]
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மதுபாட்டில்களை திரும்ப பெரும் திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.அதன்படி, டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்கள் திரும்ப கொடுத்து விட்டு,பாட்டிலுக்கு கூடுதலாக பெறப்பட்ட ரூ.10-ஐ திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.காலி மதுபாட்டில்களை சாலையோரங்கள், விளைநிலங்கள் மற்றும் வனப்பகுதிகளில் வீசி செல்வதை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே,திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள 10 டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.அதன்படி, கொடைக்கானலில் உள்ள 10 […]
கொடைக்கானலில் இன்று முதல் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடவடிக்கை அமல் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள 10 டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி,10 டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் காலி மதுபான பாட்டில்கள் திரும்ப பெறப்படும்.இதனால் மதுபானம் வாங்குவோர் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக செலுத்த வேண்டும் என்றும் […]
ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறையில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு ரூ.121 கோடி விடுவிப்பு என முதலமைச்சர் தகவல். திண்டுக்கலில் ஏற்கனவே நிறைவடைந்த ரூ.40.45 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகளை தொடக்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.206.54 கோடி மதிப்பிலான 285 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மொத்தம் 54,230 பயனாளிகளுக்கு ரூ.364.95 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதன்பின் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், திண்டுக்கல் மாவட்டத்துக்கான காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ரூ.95.5 கோடியில் மேம்படுத்தப்படும் […]
ஆம்வே இந்தியா நிறுவனத்தின் ரூ.758 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் மோசடி செய்த ஆம்வே இந்தியா நிறுவனத்தின் ரூ.758 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆம்வே நிறுவனத்துக்கு சொந்தமான கட்டடம், தொழிற்சாலை நிலங்கள் மற்றும் வங்கி வைப்புத் தொகை ஆகியவற்றையும் முடக்கம் செய்யபட்டுள்ளது. அதன்படி, ரூ.411.83 கோடி மதிப்புள்ள ஆம்வே நிறுவனத்தின் அசையும், அசையா செதுக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 36 வெவ்வேறு […]
திண்டுக்கல் அருகே உள்ள கே.கீரனூர் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தயம் அருகே கே.கீரனூர் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் கூறிய நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியேறி சாலையில் மக்கள் தஞ்சம் அடைந்தனர்.
விபத்து ஒன்றில் உயிரிழந்த சகோதரனின் ஆசையை நிறைவேற்ற அவரது உருவச்சிலையின் மடியில் தனது பிள்ளைகளின் காதணி விழாவை சகோதரி ஒருவர் நடத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டித்துரை. இவருக்கு வயது 21. இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார். சகோதரர் மீது அதிக பாசம் கொண்டிருந்த அவரது சகோதரி பிரியதர்ஷினி தனது இரண்டு குழந்தைகளான (தாரிகா,மோனேஷ்)-க்கு தாய்மாமன் பாண்டித்துரையின் மடியில் வைத்து காதணி விழாவை நடத்தியிருந்தால் நன்றாக […]
கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. திண்டுக்கல் அடுத்துள்ள முத்தனம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் செவிலியா் கல்லூரியின் தாளாளா் ஜோதிமுருகன் மீது மாணவிகள் பாலியல் புகாா் அளித்தனர். புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தாளாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சாலை மறியல் ஈடுபட்டனா். போலீசார் பல மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் ஜோதிமுருகனை […]
திருவண்ணாமலை:நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான புகாரில் சிக்கிய அக்கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். திண்டுக்கல் அருகே உள்ள முத்தனம்பட்டியில் செயல்பட்டு வரும் சுரபி நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன்,அங்கு பயிலும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவ,மாணவிகள் சில தினங்களுக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது,ஜோதி முருகனை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதன்காரணமாக,அவர் மீது போலீசார் போக்சோ உள்பட 14 பிரிவுகளின் கீழ் போலீசார் அடுத்தடுத்து […]
தமிழகம் முழுவதும் போலீசார் பல ரவுடிகளை கைது செய்துள்ளனர். தமிழகத்தில் குற்றங்களை தடுக்கும் விதமாக பல பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீட்டில் போலீசார் ரெய்டு நடத்தினர்.மேலும்,நள்ளிரவில் ரவுடிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.டிஜிபி சைலேந்திர பாபு அவர்களின் உத்தரவின் பேரில் ரவுடிகளின் அராஜகத்தை ஒடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி,சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள சுமார் 50 ரவுடிகளின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.துணை ஆணையர் ராஜேஸ் கண்ணா தலைமையில் நடந்த இந்த சோதனையில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பல […]
திண்டுக்கல்லில் புதுமண தம்பதிக்கு வித்தியாசமான கல்யாண பரிசாக பெட்ரோல் மற்றும் சின்ன வெங்காயத்தை நண்பர்கள் வழங்கினார்கள். அண்மை காலமாக பெட்ரோல் ,டீசல் விலை உயர்ந்து வருகிறது.இதனால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.அதே வேளையில் மறுப்புறம் வெளி மாநிலங்களில் விளைச்சல் பாதிப்பு காரணமாக சின்ன வெங்காயத்தின் விலையும் உயர்ந்துள்ளது.இது மேலும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் கோவிந்தராஜ் மற்றும் வினோதினி ஆகியோரின் திருமணம் நடைபெற்றது.திருமண விழாவிற்கு வந்த உறவினர்களும் நண்பர்களும் மணமக்களுக்கு […]
திண்டுக்கல்லில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலிற்கு நடிகர் சிம்பு சென்றுள்ளார். நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் திரைப்படம் ஈஸ்வரன். இந்த படத்தை சுசீந்திரன் அவர்கள் இயக்கி வருகிறார். மேலும் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் விருவிருப்பாக மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர். இது சிம்பு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நடிகர் சிம்பு ஈஸ்வரன் படத்தின் […]