நடிகர் மற்றும் பாடகரான தில்ஜித் டோசன்ஜ், டெல்லி எல்லையில் நடந்த விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்கு குளிர்தாங்கும் ஆடைகளை வாங்க ரூபாய் 1 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார். அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் கடந்த 12 நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக டெல்லி – நொய்டா எல்லைகள் மூடப்பட்டுள்ளது. […]