மத்திய பிரதேசத்தில் மக்கள் தீர்ப்புக்கு எதிராக பாஜக குறுக்கு வழியில் ஆட்சியமைக்க முயற்சி செய்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார். பின்னர் சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பெங்களூரு கொண்டு செல்ல, பாஜக 3 விமானங்களை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மாஃபியாக்களுக்கு எதிராக கமல்நாத் நடவடிக்கை எடுத்ததால் தான், காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக திக்விஜய் சிங் கூறியுள்ளார். இதனிடையே காங்கிரசின் முக்கிய தலைவரான […]