பெரு : பெரு நாட்டில் Juventud Bellavista மற்றும் Familia Chocca ஆகிய இரண்டு கிளப்புகளுக்கு இடையில் Huancayoவில் இடம்பெற்ற போட்டியின் போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி மாலை 4 மணியளவில் புயல் தீவிரமடைந்தபோது, போட்டி நிறுத்தப்பட்டதாகவும் நடுவர் ஆட்டத்தை நிறுத்திய பிறகு, வீரர்கள் மைதானத்திற்கு வெளியே சென்று கொண்டிருந்தபோது, மின்னல் தாக்கி வீரர்கள் சிலர் அப்படியே கீழே விழும் சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. அதில், 39 வயதான கால்பந்து […]
அசாமில் உள்ள சாரைடியோ, திப்ருகார், சிவசாகர் மற்றும் டின்சுகியா ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 2 நாட்களில் மட்டும் 13 பேர் தவறுதலாக விஷக் காளான்களை சாப்பிட்டு உயிரிழந்துள்ளதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பிரசாந்த் டிஹிங்கியா அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த நான்கு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 35 நோயாளிகள் காளான் சாப்பிட்டு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 13 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள நான்கு பெரிய அரசு மருத்துவமனைகளாகிய எய்ம்ஸ், ராம் மனோகர் லோகியா, சப்தர்ஜங் மருத்துவமனை மற்றும் சுசேதா கிரிப்லானி ஆகிய 4 மருத்துவமனைகளிலும் ஒவ்வொரு மாதமும் பிரசவத்திற்கு பின் 16 பெண்கள் உயிரிழப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த 4 மருத்துவமனைகளிலும் ஜனவரி 2015 முதல் செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு பிரசவத்திற்கு பின்பு 1281 பெண்கள் பிரசவத்திற்கு பின் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் பெண்களின் பிரசவத்திற்கு பின் ஏற்படும் உயிரிழப்புக்கு, அதிக ரத்தப்போக்கு, […]
மேற்கு வங்கத்தில் கடுமையான சுவாச பிரச்சனை மற்றும் காய்ச்சலால் 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமே தற்பொழுது வரை குறையாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில பகுதிகளில் தொடர்ச்சியாக பல்வேறு குழந்தைகள் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். அதிலும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜல்பைகுரி என்னும் மாவட்டத்தில் கடுமையான சுவாசப் பிரச்சனை மற்றும் காய்ச்சல் காரணமாக […]
ஆப்கானில் இருந்து விமானத்தில் தொங்கியபடி தப்ப முயன்று கீழே விழுந்து இறந்தவர்களில் அந்நாட்டின் கால்பந்து வீரர் ஜக்கி அன்வாரியும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பலர் அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையங்களில் குவிந்தனர்.இதனையடுத்து,நகர பேருந்துகளில் ஏறுவதற்கு முயற்சிப்பது போல், விமானத்தில் ஏறுவதற்கு முயற்சித்து வரும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதேபோல்,அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான விமானத்தில் இடம் கிடைக்காத நிலையில், விமான சக்கரத்தில் தொங்கியபடி சிலர் ஆபத்தான பயணம் செய்துள்ளனர்.விமானம் […]
புகைபிடிப்பவர்களுக்கு கடுமையான நோய் பாதிப்பு மற்றும் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு ஏற்பட 50 சதவிகிதம் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். புகைப்பிடிப்பவர்கள் சார்ஸ் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையினால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.ஏனெனில் புகைபிடிப்பதால், வைரஸானது கையிலிருந்து வாய்க்கு பரவி,அதன் மூலமாக மனித நுரையீரலை பாதிக்கிறது,எனவே,இதுபோன்ற எந்தவொரு புகையிலை தயாரிப்புகளையும் பயன்படுத்தக் கூடாது என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். அந்த வகையில்,உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் மற்றும் […]
மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 7 கொரோனா நோயாளிகள் இறந்துள்ளனர். மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தின் வசாய் தாலுகாவில் உள்ள நால்லசோப்ராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது. இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் இறந்துவிட்டதாக குற்றம் சாட்டினர். நால்லசோப்ரா மருத்துவமனை அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். வசாயில் 7,000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் […]
திண்டுக்கல்லில் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒரே நாளில் ஒருவர் கொலை, ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் எண்ணிக்கையும், அவர்களுக்கு ஆதரவானவர்களும் அதிகரித்துவிட்டனர். அதே போல தான் காரணமில்லாத மரணங்களும், தற்கொலைகளும் நிகழ்கிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நத்தம் ரெட்டிபாளையத்தை சேர்ந்த ஓரினச்சேர்க்கையாளர்கள் தான் 19 வயதுடைய ஸ்ரீகாந்த் மற்றும் 33 வயதுடைய ராமச்சந்திரன். இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்களாக கணவன் மனைவி வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், சென்னை வணிக வளாகத்தில் வேலை செய்து வந்த ஸ்ரீகாந்த் […]
கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. பல நாடுகள் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றது. உலகம் முழுவதும் 9,714,809 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 491,856 பேர் உள்ளது. இந்த வைரஸைக் கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் , யுனிசெஃப், கொரோனா வைரஸ் பாதிப்பால் தெற்காசியாவில் 120 மில்லியன் குழந்தைகள் வறுமைக்குத் தள்ளப்படுவார்கள் அபாயம் உள்ளது என கூறியுள்ளது. பொருளாதாரத்தை […]
ஈரோட்டில் பப்ஜி கேம் விளையாடி கொண்டு இருந்த சிறுவன் திடீரென உயிரிழந்தார். நாடு முழுவதும் தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் எல்லாம் வீடுகளில் முடங்கி உள்ள்ளனர். இந்நிலையில், வீட்டிற்குள் இருக்கும் இளைஞர்கள் தங்கள் பொழுதை போக்க ஆன்லைன் விளையாட்டான பப்ஜி மற்றும் லூடோ ஆகிய விளையாட்டுகள் பிரபலமாக விளையாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, ஈரோட்டில் செல்போனில் பப்ஜி கேம் விளையாடி கொண்டு இருந்த சிறுவன் திடீரென உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் உள்ள கமலா […]
கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த15 பேர் கொண்ட குழு விடுமுறை நாட்களில் நேபாளத்தில் உள்ள போகாரா என்ற பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில், 2 ஜோடிகள் தங்களின் குழந்தைகளுடன் ஒரே அறையில் தங்கியுள்ளனர், அறையில் ஹீட்டரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு மூச்சு திணறி 8 பேரும் உயிரிழந்தனர். கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த15 பேர் கொண்ட குழு விடுமுறை நாட்களில் நேபாளத்தில் உள்ள போகாரா என்ற பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பின்னர் சுற்றுலா முடித்துவிட்டு நேபாளத்தின் மக்வான்பூர் மாவட்டத்தில், டாமனில் உள்ள ஒரு […]
சபரிமலையில் நடை திறந்த நாள் முதல் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இங்கு பாதுகாப்புக்காக 5 கட்டமாக 23,000 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை ஏராளமான துப்பரவு தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.அதில் தமிழகத்தை சார்ந்த பல துப்பரவு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குழுவில் மதுரை சுப்பிரமணியபுரத்தை சார்ந்த கணேசன் என்பவரும் துப்பரவு பணி செய்து வருகிறார்.கடந்த 17-ம் தேதி சன்னிதானத்தில் துப்பரவு பணி ஈடுபட்டு […]
அசாம் மாநிலத்தில் உள்ள கோல்பாரா பகுதியில் இருக்கும் மக்களை லேடன் என்ற காட்டு யானை அச்சுறுத்தி வந்தது மட்டுமல்லாமல் அப்பகுதியில் உள்ள 5 பேரை லேடன் மிதித்து கொன்றது. இதனால் லேடன் யானையை பிடித்து காட்டில் விடுமாறு மக்கள் அறிவுறுத்தினர்.இதை தொடர்ந்து லேடன் யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி செய்தனர். ஆளில்லா விமானம் மூலம் வனத்துறையினர் லேடன் யானையை கண்காணித்து வந்தனர். கடந்த 11-ம் தேதி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி லேடன் யானையை பிடித்து ஓரங் […]