முதலீட்டு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழக சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக நிதியமைச்சர் அறிவிப்பு. வங்கிகள் கடனை காலம் தாழ்த்தி கொடுப்பதற்கான சட்ட உரிமையின் கீழ் இதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வங்கியில் பணம் செலுத்தியவர்கள், வங்கி திவாலான 90 நாட்களுக்குள் ரூ.5 லட்சம் வரையிலான காப்பீட்டு தொகை பெற முடியும் என்றும் இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். […]