புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன் காக்க “புலம்பெயர் தமிழர் நல வாரியம்” தோற்றுவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தற்போது அறிவிப்பு விடுத்துள்ளார். அரசு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் 13 பேர் கொண்டதாக வாரியம் இயங்கும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “உலகளாவிய இனம் ஒன்று உண்டென்றால் அது தமிழினம் தான். தொன்மை மிக்க இந்த தமிழினம், பரவிய […]