வேலூர்:ஜோஸ் ஆலுக்காஸில் கடந்த 15 ஆம் தேதி நடைபெற்ற 15 கிலோ தங்கம்,500 கிராம் வைரம் கொள்ளை சம்பவம் தொடர்பாக ஒருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த டிச.15 ஆம் தேதி வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸில் பின்பக்க சுவர் வழியாக துளையிட்டு மர்ம நபர்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.அதன்படி,15 கிலோ தங்கம் மற்றும் 500 கிராம் வைரம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து,இந்த சம்பவம் தொடர்பாக […]
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் சேர்ந்த லகன் யாதவ், ரூ.200 குத்தகை எடுத்த நிலத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள வைரக் கற்களை கண்டெடுத்து உள்ளார். மத்திய பிரதேச மாநிலம், போபாலில் சேர்ந்த லகன் யாதவ். இவர் கடந்த மாதம் ரூ.200 க்கு ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார். அந்த நிலத்தில் பத்துக்கு பத்து என்ற அளவில் குழிதோண்டி உள்ளார். அதில் இருந்த மண்ணை அகற்றும் முயன்றுள்ளார். அப்போது கற்களும் சேர்ந்து வந்தது. அந்த கல் வித்தியாசமாக காணப்பட்டுள்ளது. […]
7,801 வைரக் கற்கள் கொண்ட மோதிரம். நகைகள் என்றாலே விதவிதமாக, அழகான தங்க நகைங்களை நாம் பார்த்திருப்போம். அதே சமயம் வைரத்தில் செய்யப்பட்ட விதவிதமான நகைகளை பார்ப்பது சற்று கடினம் தான். இந்நிலையில், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தை சேர்ந்த கோட்டி ஸ்ரீகாந்த் என்பவர் நகைக்கடை ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில், இவர் ‘பிரம வஜ்ரா கமலம்’ என்ற பெயரில், பூ வடிவிலான வைர மோதிரத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பிரம கமலம் என்பது, இமயமலையில் வளரக் கூடிய, […]
கூலி தொழிலாளிக்கு அடித்த அதிஷ்டம். மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில், சுபால் என்ற தொழிலாளி, வைர சுரங்கம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் 7.5 காரட் அளவிலான மூன்று வைர கற்கள் கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்த கூலி தொழிலாளி அந்த வைர கற்களை, வைர அலுவலகத்தில் ஒப்படைத்தார். அங்கு அந்த வைரம் ஏழாம் விடப்பட்டு, தொழிலாளி சுப்பாலுக்கு 12% வரி போக மீதம் 88% தொகையான ரூ.35 லட்சத்தை கொடுத்துள்ளனர்.