அப்பாவைப் போல் மகள்! தோனி மகளுக்கு மெஸ்ஸி அனுப்பிய ஜெர்சி.!
எம் எஸ் தோனியின் மகளான ஜிவா தோனிக்கு, அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி தனது கையொப்பமிட்ட ஜெர்ஸியை அனுப்பியுள்ளார். பரபரப்பாக நடந்து முடிந்த கத்தார் உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அணி, சாம்பியன் பட்டம் வென்றது. உலகெங்கும் உள்ள மெஸ்ஸி ரசிகர்கள், அர்ஜென்டினா அணியை ஆதரித்து வந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து அர்ஜென்டினாவும் உலகக்கோப்பையை வென்றது, மெஸ்ஸியும் கோல்டன் பால் விருது வென்றார். உலகக்கோப்பை முடிந்துள்ளதால் தற்போது மெஸ்ஸி, தனக்கும் அணிக்கும் ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி கூறி வருகிறார். இந்நிலையில் […]