அதிரடி ஆட்டக்காரர் ஜோஷ் பட்லர்க்கு பரிசு அளித்து தோனி அசத்தியுள்ளார் ஐ.பி.எல்: 2020 போட்டியில் சென்னை அணியை ராஜஸ்தான் அணி வீழ்த்தியது. இப்போட்டியில் அதிரடி காட்டிய ஜோஸ் பட்லர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போட்டிக்கு பின்னர் கேப்டன் தோனியிடம் ஜோஸ் பட்லர் அவரது ஜெர்சியை கேட்கவே தான் அணிந்திருந்த ஜெர்சியை கழற்றி பட்டுவின் விருப்ப படியே நினைவு பரிசாக அளித்து தோனி அசத்தினார். தோனி அளித்த ஜெர்சியுடன் பட்லர் எடுத்த புகைப்படத்தை ராஜஸ்தான் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.