‘பகுத்தறிவு பகலவன்’, ‘வைக்கம் வீரர்’, ‘தந்தை பெரியார்’, தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் என பல்வேறு பெயர்களில் அழைக்கபடும் ஈ.வெ ராமசாமி மறைந்த தினம் இன்று. 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி, ஈரோட்டில் பிறந்த இவர், தன்னுடைய சிறு வயது முதலே தன்னுடைய பகுத்தறிவால், புராணக் கதைகளில் தனக்கு தோன்றிய வினாக்களுக்கு விடை தேடத் தொடங்கினார். காங்கிரஸ் கட்சியின் கொள்கை மேல் கொண்ட ஈடுபாடு காரணமாக 1919 ஆம் ஆண்டு தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். […]