விருந்தினராக வருபவருக்கு கறுப்புக்கொடி காட்ட வேண்டிய அவசியமில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் ட்வீட். இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், திடீர் ஞானோதயம் பெற்றிருக்கிற தி.மு.க, “பிரதமர் மோடி எங்களுக்கு எதிரி இல்லை. விருந்தினராக வருபவருக்கு கறுப்புக்கொடி காட்ட வேண்டிய அவசியமில்லை” என்று கூறியுள்ளதைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்தால் ஒன்று, ஆளுங்கட்சியான பிறகு வேறொன்று என தி.மு.க போடும் இரட்டை வேடங்கள் அம்பலமாகி வருவதற்கு […]
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். திருவண்ணாமலையில் அமமுக மற்றும் கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளர் இருவரையும் ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, அமமுகவுக்கு வாய்ப்புத் தரும் விதமாக மக்கள் வாக்களிக்க வேண்டும். திமுக கூட்டணி தீய சக்தி; ஆளுங்கட்சி கூட்டணி துரோக சக்தியை தோற்கடிக்க வேண்டும். அதிமுகவும், பாஜகவும் தமிழ் மக்களுக்குத் தீங்கு விளைவித்து வருவதாகவும், அதனால் அவர்களை மக்கள் புறம்தள்ளும் […]
M.சந்தோஷ்குமார் அவர்களுக்கு பதிலாக அவரது மனைவி திருமதி.S.சங்கீதப்ரியா சந்தோஷ்குமார் ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) நிறுத்தப்படுகிறார் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அமமுக சார்பில் இன்னும் முழுமையாக கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடையாத நிலையில், தற்போது அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகி வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான 15 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, இன்று 50 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் டிடிவி […]
தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது உண்மை தான் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக உடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், தாங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்காத நிலையில், கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, அன்றைய தினமே தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது அவர்கள் தனித்து போட்டிட தயாராக உள்ளோம். ஆனால் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதற்கு முன்பாக அவர்களிடம் கருத்து கேட்கவேண்டும் […]
தற்போது வரை 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அப்போது செய்தியாளர் நீங்கள் எத்தனை தொகுதிகளில் போட்டியிட உள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்க்கு தினகரன், 2 நாள்களில் அறிவிக்க உள்ளேன். அப்போது தெரியப்போகிறது என கூறினார். 1 அல்லது 2 தொகுதிகளில் போட்டி என கேள்வி எழுப்பியதற்கு, தற்போது வரை 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளேன் என […]
அமமுக சார்பில் நேர்காணல் மார்ச் 8, 9 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமமுகவில் விருப்பமனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில், விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் மார்ச் 8, 9 தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றப் பேரவைகளுக்கான பொதுத்தேர்தல்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தலைமைக் கழகத்தில் கடந்த 3.3.2021 முதல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் கழக உடன்பிறப்புகளுக்கு விருப்ப […]
இன்று மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பெங்களூரில் உள்ள சசிகலா 7-ஆம் தேதி தமிழகத்திற்கு திரும்பி வருகிறார். அதனால் அம்மாவின் உண்மையான தொண்டர்கள், தமிழக மக்கள் சசிகலா நல்லவிதமாக வந்து சேர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் கன்னியாகுமரி முதல் திருத்தணி வரை உள்ள கழக தொண்டர்கள் தமிழக எல்லையிலிருந்து சென்னை வரை அலைகடலென திரண்டு இருந்து சசிகலாவை வரவேற்க தயாராகி வருகிறார்கள். […]
வயர்மேன் ,ஹெல்பர் போன்ற வேலைகளுக்குச் செல்லலாம் எனக் காத்திருக்கும் ஐ.டி.ஐ படித்த ஆயிரக்கணக்கான தமிழக இளைஞர்களின் கனவிலும் இந்த ஆட்சியாளர்கள் மண் அள்ளி போட்டிருக்கிறார்கள் என்று தினகரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள உதவியாளர், வயர்மேன் பணியிடங்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் ஆட்கள் நியமிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதன் மூலமாக தனியாருக்கு 12,000 இடங்கள் செல்கிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.இந்த பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் 3 ஆண்டுகள் பணி […]