தமிழ்நாடு முழுவதும் வாரந்தோறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு. தமிழ்நாடு முழுவதும், ஒவ்வொரு புதன் கிழமையும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, வாரந்தோறும் புதன்கிழமைகளில் காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஐ.ஜி.க்கள் ஆகியோர் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
காவலர்களுக்கான கட்டாய வார ஓய்வு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி. தமிழ்நாடு காவல்துறையில் சேலம் சரகத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு காவலர்களுக்கு பரிசளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, காவலர்களுக்கான கட்டாய வார ஓய்வு, பண்டிகை காலங்களிலும், சட்ட-ஒழுங்கு பிரச்னை சமயங்களிலும் கடைப்பிடிக்க இயலாது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. […]
தமிழக காவல்துறையின் ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 133 முக்கிய ரவுடிகள் கைது. தமிழ்நாடு முழுவதும் போலீசார் நடத்திய ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் கடந்த 24 மணி நேரத்தில் 133 முக்கிய ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 133 பேரில் கொலை, கொள்ளை வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 15 பேர் மற்றும் மின்னல் ரவுடி வேட்டையில் பல ஆண்டுகளாக போலீசாரிடம் பிடிபடாமல் இருந்த 13 ரவுடிகளும் தற்போது பிடிபட்டனர். தமிழ்நாடு […]
தமிழகம் முழுவதும் ஆப்ரேஷன் கஞ்சா வேட்டையில் கஞ்சா வியாபாரிகளின் 2,000 வங்கி கணக்குகள் முடக்கம் என அறிவிப்பு. தமிழகம் முழுவதும் ஆப்ரேஷன் கஞ்சா வேட்டையில் கஞ்சா வியாபாரிகளின் 2,000 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின்பேரில் ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 சோதனை தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை என்ற பெயரில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் ஆப்ரேஷன் கஞ்சா வேட்டையில் கஞ்சா […]
குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என காவல்துறை எச்சரிக்கை. தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா என நாடு முழுவதும் 12 மாநிலங்களில் கடந்த 22ம் தேதி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பயங்கரவாதிகளிக்கு நிதி திரட்டிய புகாரின் பேரில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய மற்றும் மாநில அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இந்த […]
கோவை மாநகர உளவுத்துறை ஆணையராக பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாநகர உளவுத்துறை ஆணையராக பார்த்திபனை நியமித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். அடுத்தடுத்து நிகழந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை தொடர்ந்து உளவுத்துறை உதவி ஆணையர் மாற்றம் செய்து தமிழக டிஜிபி உத்தரவிட்டார். சிங்காநல்லூர் துணை ஆணையர் அருண் சிறப்பு புலனாய்வு பிரிவு ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவையில் கடந்த 3 நாட்களாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வரும் நிலையில், டிஜிபி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். தொடர் […]
கள்ளக்குறிச்சி கலவரத்தை விசாரிக்க 18 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து டிஜிபி உத்தரவு. கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தொடர்பாக நடந்த கலவரத்தை விசாரிக்க 18 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்தார். இந்த சிறப்பு புலனாய்வு குழுவில் 6 டிஎஸ்பி-க்கள், 9 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 3 சைபர் கிரைம் பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். மேலும், சின்னசேலம் போலீசார் பதிவு செய்த 3 குற்ற […]
தமிழகத்தில் முன்னதாக கொரோனா தீவிரமாக பரவிய நிலையில்,ஊரடங்கு உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.மேலும்,வெளிமாநிலம், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,கொரோனா விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் வாபஸ் பெறுவதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.எனினும்,இ-பாஸ் பெற்றதில் முறைகேடு,காவல்துறையினரை தங்கள் கடமையை செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட குற்றங்களை தவிர அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக தமிழக டிஜிபி அறிவித்துள்ளார். கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறியது தொடர்பான வழக்குகளை வாபஸ் […]
காவல் ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு. தமிழ்நாட்டில் 91 காவல் ஆய்வாளர்களுக்கு, துணை கண்காணிப்பாளர்களாகவும், காவல்துறை உதவி ஆணையர்களாகவும் பதவி உயர்வு மற்றும் புதிய பொறுப்புகளை வழங்கி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதனிடையே, சென்னையில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறமையாக செயல்பட்ட ரயில்வே போலீசாரை பாராட்டி சான்றிதழ் வழங்கிய பின் பேசிய டிஜிபி, தமிழகத்தில் கடந்த ஓராண்டில் குற்றங்கள் குறைந்துள்ளன என்றும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் […]
தமிழகத்தில் ஏப்ரல் 27 வரை ஒரு மாதத்துக்கு ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 திட்டம் நடத்த டிஜிபி உத்தரவு. கஞ்சா மற்றும் குட்கா விற்பறோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என காவல்துறைக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 27 வரை ஒரு மாதத்துக்கு ஆபரேஷன் கஞ்சா வேட்டை நடத்த டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 திட்டம் நேற்று தொடங்கிய நிலையில், காவல்துறை […]
தந்தையின் ட்ராக்ட்டரை அபகரித்த உறவினரை, டிஜிபி சைலேந்திர பாபுவிடம் புகாரளித 14 வயது சிறுமி. ஈரோடு மாவட்டம், வைராபாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி தர்சனா. இவரது தந்தை கடந்த ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், அவரது தந்தையின் டிராக்டரை, தனக்கு கடன் கொடுக்க வேண்டும் என பொய் சொல்லி, அவர்களது உறவினரான பூபாலன் என்பவர் டிராக்ட்ரை அபகரித்து வைத்துள்ளதாகவும், தனது பாட்டியுடன் வாழ்ந்து வரும் தன்னை மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதனையடுத்து, 14 […]
வாகன ஓட்டிகள் சிக்கனலில் காத்திருக்கும் போது, அவர்களின் காத்திருப்பை பயனுள்ளதாக மாற்ற, வாழ்க்கை தத்துவங்களை கூறி உற்சாகப்படுத்தி வருகிறார், போக்குவரத்து சார்பு ஆய்வளரான பழனியாண்டி. மதுரையில் போக்குவரத்து சார்பு ஆய்வளரான பழனியாண்டி, வாகன ஓட்டிகள் சிக்கனலில் காத்திருக்கும் போது, அவர்களின் காத்திருப்பை பயனுள்ளதாக மாற்றும் வகையில், வாழ்க்கை தத்துவங்களை கூறி உற்சாகப்படுத்தி வருகிறார். இவரது இந்த செயல், வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒலிபெருக்கி வாயிலாக வாகன ஓட்டிகளிடம், எதைப்பற்றியும் கவலைப்பட கூடாது. இன்னைக்கு விட நாளைக்கு […]
கொரோனா மூன்றாவது அலை வந்தால் காவல்துறைக்கு அதிக ரிஸ்க் உள்ளது என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் கவலை மருத்துவமனையில் புதிதாக ஆக்சிஜன் சேமிப்பகத்தை தொடங்கி வைத்த பின் பேசிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, கொரோனா மூன்றாவது அலை வந்தால் காவல்துறைக்கு அதிக ரிஸ்க் இருக்கிறது என்றும் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையில் காவல்துறையின் பணி முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காவல்துறையினருக்கு வாராந்திர ஓய்வு நாள், பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களில் விடுமுறை வழங்க காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு சுற்றறிக்கை. இதுதொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக்காகவும், தங்களது குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். வார நாட்களில் ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவலர்களுக்கும், ஓய்வு தினத்தன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மிகைநேர ஊதியம் […]
காவல்துறையினர் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும்போது கண்டிப்பாக டிக்கெட் எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு. காவல் துறையினர் தங்கள் சொந்த தேவைக்காக தமிழக அரசு பேருந்தில் பயணம் செய்யும்போது கண்டிப்பாக டிக்கெட் எடுத்து பயணம் செய்ய வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். கைதிகளை அழைத்து செல்லுதல், வாரண்ட் தொடர்பான பணிகள் தவிர மற்ற சொந்த பயணங்களுக்கு காவல்துறையினர் டிக்கெட் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், விதிகளை முறையாக […]