செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 1000-க்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கு, டிஜிபி சைலேந்திரபாபு பிரியாணி விருந்தளித்துள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து 12 நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நிறைவு […]
திண்டுக்கல் பாச்சலூரில் மர்மமான முறையில் இறந்த சிறுமி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி உத்தரவு. திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூரில் 5-ஆம் வகுப்பு சிறுமி பள்ளி அருகே உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். பள்ளி அருகே தீயில் கருகி இறந்து கிடந்த சிறுமி வழக்கில் மர்மம் நீடிக்கும் நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியை அடுத்த தாண்டிக்குடி கிராமத்தை சேர்ந்த […]
ஹெலிகாப்டர் விபத்து நடந்த குன்னூர் பகுதியில் உள்ள மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு, கம்பளி வழங்கி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். குன்னூரில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் நடந்த போது, அப்பகுதியில் உள்ள மக்கள் மீட்புப்பணிகள் மேற்கொள்ள உதவியாக இருந்தனர். இதனையடுத்து, விபத்து நடந்த குன்னூர் பகுதியில் உள்ள மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு, […]
முதல்வர் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற நபரை காப்பாற்றிய காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார். ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தின் முன் வந்த வெற்றிமாறன் என்ற நபர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயை பற்றவைத்துள்ளார். இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த நபர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தீயை பாதியில் அனைத்த போலிசார் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், […]
கூலிப்படையினர் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த இரு தினங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இது குறித்து நேற்று மாலை நான்கு மாவட்ட எஸ்பிகளுடன் நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பின்பதாக பேசிய அவர், தமிழகத்தில் கூலி படையினரின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும், நெல்லை, திண்டுக்கல் […]
தமிழகத்தில் 48 மணிநேரத்தில் மொத்தம் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தகவல். தமிழகம் முழுவதும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2 நாட்கள் சுமார் 48 மணிநேரத்தில் சோதனை நடத்தியதில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் 733 ரவுடிகள் நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 934 அரிவாள்கள், 5 துப்பாக்கிகள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றியுள்ளன. […]