செல்போன் திருடனை மடக்கி பிடித்த பெண் காவலர் காளீஸ்வரியை, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு அலுவலகத்திற்கு நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டு தாம்பரத்தில் பயணி ஒருவரிடம் இருந்து விலை உயர்ந்த ‘ஐ- போனை’ பறித்துக் கொண்டு பேருந்தில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்த திருடனை பெண் காவலர் காளீஸ்வரி சாதுரியமாக மடக்கி பிடித்தார். இவரது துணிச்சலான இந்த செயலுக்கு அதிகாரிகள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், சாதுரியமாக செயல்பட்டு செல்போன் திருடனை மடக்கி பிடித்த பெண் […]
போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுரை. மாண்புமிகு உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக் குழு மற்றும் போக்சோ குழுவினர் போக்சோ சட்டத்தினை ஆய்வு செய்து போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுரைகள் வழங்கியுள்ளார். அதன்படி, திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்களில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது. அதற்கு பதிலாக, கு.வி.மு.ச பிரிவு 41 (4) ன் படி சம்மன் அனுப்பி எதிரிகளை எதிர் மனுதாரரை விசாரணை செய்யலாம். […]
கல்வி நிறுவனங்களில் மாணவர்களை ராக்கிங் செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி சுற்றறிக்கை. கல்வி நிறுவனங்களில் மாணவர்களை ராக்கிங் செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், ராக்கிங் சம்பவம் தொடர்பாக புகார்கள் மீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தாரால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மீது திருப்தியடையாத பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். […]
கோவை கார் வெடிவிபத்து, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலை குறித்தும் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் , டிஜிபி சைலேந்திர பாபு, தலைமை செயலர் இறையன்பு, உளவுத்துறை முக்கிய அதிகாரி, உள்துறை அதிகாரிகள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவை உக்கடம் அருகே கோட்டைமேடு பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த ஜமேஷ் முபின் உடல் கருகி உயிரிழந்தார். […]
டிஜிபி சைலேந்திரபாபு, அரசிடம் சம்பளம் வாங்குகிறாரா அல்லது பி.எப்.ஐயிடம் சம்பளம் வாங்குகிறாரா தெரியவில்லை என பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காரைக்குடி டிஎஸ்பியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு, தமிழ்கத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் , மண்ணெண்ணை குண்டுகள் வீசப்பட்டன. சிசிடிவி கேமிராக்களை ஆராய்ந்து, பல்வேறு விசாரணைகள் மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால், இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜகவினர் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இது […]