நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் அகல் விளக்கு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது அரசியலில் ஈடுபாடுடன் இருக்கிறார். இந்நிலையில், விஜயகாந்தின் ரசிகையாக தெய்வானைக்கு வயது 101. இவர் தனது 101-வது பிறந்தநாளை விஜயகாந்துடன் கொண்டாட வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். இதனையடுத்து விஜயகாந்த் தனது அலுவலகத்திற்கு அவரை அழைத்து, அவருக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகளை வழங்கியுள்ளார்.