இன்று(மே.,22)இன்றைய ராசிபலன்12ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..? என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று உங்களுடைய சொத்துக்களால் லாபம் கிடைக்கும்.வாழ்க்கை தரம் உயர வழிவகை செய்வீர்கள் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.இன்று வருமானம் எதிர்பார்த்த படி வந்து சேரும். ரிஷப ராசிக்காரர்கள்: […]
ஆந்திராவில் புதிதாக அமையவுள்ள வெங்கடேஸ்வரா ஸ்வாமி திருக்கோயில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடாச்சலபதி கோவிலைப் போன்று ஆந்திரா மாநில தலைநகர் அமராவதியில் புதிதாக அமைய இருக்கும் திருக்கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஆந்திரா தலைநகர் அமராவதியின் உள்ள வெங்கடபாலம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா ஸ்வாமி திருக்கோயில் அமைக்கப்படுமென ஏற்கனவே அம்மாநில முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று கோவில் கட்ட நடைபெற்ற பூமி பூஜையில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் […]
ஆரணியில் உள்ள ஸ்ரீஅறம் வளர்நாயகி சமேத ஸ்ரீகயிலாசநாதர் கோயிலில் மார்கழி மாத பிரதோஷ விழா நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை பகுதியில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அறம்வளர்நாயகி சமேத கயிலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அடுத்தபடியாக பெரிய கோவிலாக விளங்கி வருகிறது. ஸ்ரீ அறம்வளர்நாயகி சமேத கயிலாசநாதர் கோவிலில் மார்கழி மாதம் பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் பார்வதி மற்றும் நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம் மஞ்சள் […]
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் ஆந்திர ஆளுநர் நரசிம்மன் ஆய்வு மேற்கொண்டார். வைகுண்ட வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இன்று இரவு 12 மணிக்கு மேல் திறக்கப்படும் சொர்க்கவாசல் 19 ம் தேதி நள்ளிரவு வரை இரண்டு நாட்கள் திறந்திருக்கும். இந்த இரண்டு நாட்களிலும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கும் சொர்க்கவாசல் பிரவேசத்திற்காகவும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என்று […]
வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து உற்சவத்தின் 9-ம் நாளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஸ்ரீ நம்பெருமாள், முத்தங்கி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரிய ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா மார்கழி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து திருமொழித் திருவிழா கடந்த 8-ம் தேதி தொடங்கியது. பகல்பத்து விழாவின் 9-ம் நாளில், ஸ்ரீ நம்பெருமாள், […]
கார்த்திகை மாத பிறப்பையொட்டி பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில் நடை தினமும் காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணிவரை திறந்திருக்கும். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமைந்து உள்ள பிள்ளையார்பட்டியில் மிகவும் பிரசித்தி பெற்ற கேட்பதை அருளும் ஸ்ரீகற்பக விநாயகர் கோவில் உள்ளது. கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மிக சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தேதி தொடங்கி […]